பதிவு செய்த நாள்
18 அக்2013
22:00

இப்பொழுது இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனைஅதிகரித்துள்ளது.கையாள சுலபமாகவும் நகரப் போக்குவரத்திற்கு ஏற்றதாகவும், ஆண், பெண்இருவரும் உபயோகிக்கலாம் என்பதும், இதற்குகாரணம் என்று கூறலாம்.ஒரே இன்ஜின் மற்றும்சேசிஸ் கொண்டு இரண்டிற்கும் மேற்பட்ட மாடல்கள் சிற்சில மாறுதல்களுடன் தயாரிக்கப்படுகின்றன. ஹோண்டா நிறுவனம்தங்களின் ஹோண்டா ஆக்டிவாவின் அடிப்படையில் "டியோ'மாடலை கொண்டு வந்தபிறகு தற்போது ஆக்டிவா-ஐ என்ற புது மாடலை தற்போது இளைஞர்களைகவரும் வகையில்கொண்டு வந்துள்ளது.
ஆக்டிவா - ஐ சற்றேஎடைக்குறைவாகவும்,அடக்கமாகவும் மிகவும்ஸ்டைலாகவும் தோற்றமளிக்கிறது. ஆக்டிவாவைப் போல உறுதியானஅன்டர்போன் சேசிஸ் இருந்தாலும் நிறைய ஃபைபர் பேனல்கள்இருப்பதால் எடைக்குறைவாக இருக்கிறது.
சற்றே நீளமான ஹெட்லைட்கள் வித்தியாசமாக உள்ளது. முன்புற மட்கார்ட் டியோவை ஞாபகப்படுத்துகிறது. இரண்டு பக்கங்களிலும் உள்ள சைட்பேனல்கள் இரண்டு இறக்கையை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் நளினமாக அமைக்கப்பட்டுள்ளது. பின்புறமும் டெயில் லாம்ப்பும். பெரிய அளவில் துல்லியமாக தெரியக் கூடியதாய் உள்ளது.
டுயூவல் டோன்இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர். இதில் ஸ்பீடாமீட்டர்,ஓடோமீட்டர் மற்றும் ஃப்யூவல் காஜ் போன்றவை ஒரே பார்வையில் எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளக்கூடிய வசதியுடன் உள்ளது. உயரம் குறைவான அகலமான சீட் வசதியான பிரயாணத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது. முன்புறம் கால் வைத்துக்கொள்ள முட்டி இடிக்காத வண்ணம் போதுமான இடம் இருக்கிறது. ஆக்டிவ் - ஐ 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடத்தை சீட்டின் அடியில் கொண்டுள்ளது. இதன் குறைவான எடை வண்டியை கையாள சுலபமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலிலும் கஷ்டம் தெரிவதில்லை.
மேலும் இதன் முன்புறலிங்க் சஸ்பென்ஷனும் பின்புற ஹைட்ராலிக் சிங்கிள் சைட் சஸ்பென்ஷனும் மிகவும் மென்மையான பயணத்தை வழங்குகிறது. ஹோண்டாவின் இன்ஜின் உறுதிக்கும் செயல்திறனுக்கு பெயர் போனது என்பது தெரிந்ததே ஆக்டிவா-ஐ HET(ஹோண்டாஇகோ டெக்னாலஜி) என்ஜின் கொண்டுள்ளது. 1092சிசி திறனுடன், 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்ட், SIஎன்ஜின் இது என்பதும் 8பிஎச்பி பவரை 7500ஆர்பிஎம்மிலும், 8.74என்எம்டார்க்கை 5500 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் இன்ஜின் Vமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்டு இயங்குகிறது. இதன் HET என்ஜின் எரிபொருள் சிக்கனம். (லிட்டருக்கு 55-60 கிலோமீட்டர்) குறைவான தேய்மானம் மற்றும் குறைவான எடை போன்றவற்றை வழங்குகிறது.
இதன் ஹோண்டா CBS பிரேக்கிங் சிஸ்டம் ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற பிரேக்குகளை இயக்க உதவுகிறது. துரிதமான ப்ரேக் பிடிப்பதற்கும் சாலை ஸ்திரத்திற்கும் இது உதவுகிறது. ஹோண்டா ஆக்டிவா-ஐயில் உள்ளது ட்யூப்லெஸ் டயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடக்கமான, ஸ்டைலான, நளினமான தோற்றம், நியாயமான விலை,எரிபொருள் சிக்கனம் நகரப் போக்குவரத்திற்கு ஏற்ப, சுலபமாக கையாளும் வகையில் உள்ளது போன்றவை இதன் இம்மாடலை வெற்றிகரமானதாக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|