பதிவு செய்த நாள்
19 அக்2013
01:14

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் உயர்ந்து, 23,312 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர்வு, அமெரிக்க அரசியலில் இயல்பு நிலை திரும்பியுள்ளது போன்ற காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,899 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,192 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 31,010 ரூபாய்க்கும் விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 2,914 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்து, 23,312 ரூபாய்க்கு விற்பனையானது.
10 கிராம் சுத்த தங்கம், 160 ரூபாய் உயர்ந்து, 31,170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 51.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,190 ரூபாய்க்கும் விற்பனையானது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|