பதிவு செய்த நாள்
24 அக்2013
14:24

புதுடில்லி: வாகனங்களை பதிவு செய்வதற்கான வரியை, குறைந்தபட்சம், 6 சதவீதமாக நிர்ணயிக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை செயலர், விஜய் சிப்பர் கூறியதாவது: தற்போது, வாகனங்களை வாங்கும் போது, அவற்றை பதிவு செய்வதற்கான, ஆயுட்கால வரி விதிக்கப்படுகிறது. இதில், இரு சக்கர வாகனங்கள், கார்கள், இலகு ரக வாகனங்கள் ஆகிய வற்றுக்கு, இந்த வரி விதிப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வரி விதிப்பை பின்பற்றும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களை பதிவு செய்வதற்கான ஆயுட்கால வரியை, குறைந்தபட்சம், 6 சதவீதமாக நிர்ணயிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் விற்பனை விலையில், குறைந்த பட்சம், 6 சதவீதமாக இருக்கும் படி, இந்த வரி நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, விஜய் சிப்பர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|