ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.72 குறைவுஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.72 குறைவு ... கறிக்­கோழி விலை கிடு­கிடு சரிவு கறிக்­கோழி விலை கிடு­கிடு சரிவு ...
டாட்டா சன்ஸ் – சிங்­கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு திட்­டத்­திற்கு ஒப்­புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2013
00:53

புது­டில்லி:டாட்டா சன்ஸ் மற்றும் சிங்­கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து, இந்­தி­யாவில் மேற்­கொள்ள உள்ள, விமான போக்­கு­வ­ரத்து சேவை திட்­டத்­திற்கு, மத்­திய அரசு, நேற்று ஒப்­புதல் வழங்­கி­யுள்­ளது.இதன் வாயி­லாக, 4.90 கோடி டாலர் அன்­னிய நேரடி முத­லீடு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பங்கு மூலதனம்:அன்­னிய முத­லீட்டு மேம்­பாட்டு வாரி­யத்தின் கூட்­டத்­திற்கு பிறகு, இந்த கூட்டு திட்­டத்­திற்கு ஒப்­புதல் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக, பொரு­ளா­தார விவ­கா­ரங்கள் துறை செயலர் அரவிந்த் மயராம் தெரி­வித்தார்.இந்­தி­யாவில் விமானச் சேவை மேற்­கொள்­வ­தற்­காக, இவ்­விரு நிறு­வ­னங்­களும் இணைந்து, டாட்டா சியா ஏர்லைன்ஸ் என்ற புதிய நிறு­வ­னத்தை துவங்­கி­யுள்­ளன.
இப்­பு­திய நிறு­வ­னத்தில், டாட்டா சன்ஸ், 51 சத­வீத பங்கு மூல­த­னத்­தையும், சிங்­கப்பூர் ஏர்லைன்ஸ், 49 சத­வீத பங்கு மூல­த­னத்­தையும் கொண்­டி­ருக்கும். கடந்த வாரம், இந்த புதிய திட்­டத்­திற்கு, நிறு­வன விவ­கா­ரங்கள் அமைச்­சகம் ஒப்­புதல் அளித்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. முதற்­கட்­ட­மாக, இவ்­விரு நிறு­வ­னங்­களும் விமானச் சேவை மேற்­கொள்­வ­தற்­காக, 10 கோடி டாலர் முத­லீடு மேற்­கொள்­கின்­றன.
இதர அமைப்­பு­களின் ஒப்­புதல் கிடைத்த பிறகு, விமானச் சேவை அடுத்த ஆண்டு முதல் துவங்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. டாட்டா குழு­மத்­திற்கு, ஏற்­க­னவே விமானச் சேவையில் அனு­பவம் உள்­ளது. அதா­வது, 1932ம் ஆண்டு, ஜே.ஆர்.டி. டாட்டா, டாட்டா – ஏர்லைன்ஸ் என்ற விமான சேவை நிறு­வ­னத்தை துவங்­கினார்.
ஏர் – இந்தியா:பின்பு, இந்த நிறு­வனம், 1946ம் ஆண்டு, ஏர் – இந்­தியா என, பெயர் மாற்றம் செய்­யப்­பட்டு, 1953ம் ஆண்டு, இந்­நி­று­வனம் தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்­டது.இதற்­கி­டையே, இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம், டாட்டா நிறு­வனம், மலே­சி­யாவைச் சேர்ந்த ஏர் – ஏசியா நிறு­வ­னத்தின் கூட்­டுடன், குறைந்த கட்­ட­ணத்தில் விமானச் சேவை மேற்­கொள்ளும் வகையில், கூட்டு திட்டம் ஒன்றை மேற்­கொண்­டது.
பின்பு, இந்த நிறு­வ­னத்தில், அருண்­பாட்­டி­யாவின் டெலிஸ்ட்ரா டிரேட்­பிளேஸ் நிறு­வனம் மூன்­றா­வது பங்­குதா­ர­ராக சேர்ந்து கொண்­டது.இந்த கூட்டு திட்­டத்­திற்கு, கடந்­தாண்டு ஏப்ரல் மாதம், அன்­னிய முத­லீட்டு மேம்­பாட்டு வாரியம் ஒப்­புதல் வழங்­கி­யது.
அன்­னிய நேரடி முத­லீடு:நடப்பு 2013–14ம் நிதி­ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரை­யி­லான நான்கு மாத காலத்தில், இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட அன்­னிய நேரடி முத­லீடு, கடந்த நிதிஆண்டின் இதே காலத்தை விட, 20 சத­வீதம் அதி­க­ரித்து, 590 கோடி டால­ரி­லி­ருந்து, 705 கோடி டால­ராக அதி­க­ரித்­து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)