முன்­பேர வர்த்­தகம் ரூ.65.59 லட்சம் கோடி­யாக வீழ்ச்சிமுன்­பேர வர்த்­தகம் ரூ.65.59 லட்சம் கோடி­யாக வீழ்ச்சி ... ரூபாய் மதிப்பில் சரிவு:61.55 ரூபாய் மதிப்பில் சரிவு:61.55 ...
கோதுமை ஏற்­று­ம­திக்­கான ஒப்­பந்­தப்­புள்ளி ரத்து:மத்­திய அரசு நட­வ­டிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2013
01:05

அயல்­நாட்டு வர்த்­த­கர்கள், இந்­திய கோது­மைக்கு மிகக் குறைந்த விலையை
குறிப்­பிட்­டதால், கோதுமை ஏற்­று­ம­திக்­கான ஒப்­பந்­தப்­புள்­ளியை, மத்­திய அரசு ரத்து செய்­தது.மத்­திய அரசு, நடப்பு நிதி­ஆண்­டிற்கு, 20 லட்சம் டன் கோது­மையை ஏற்­று­மதி செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது.
குறைந்தபட்ச விலை:இதை­ய­டுத்து, சென்ற ஜூலை மாதத்தில், ஒரு டன் கோது­மைக்­கான குறைந்­த­பட்ச ஏற்­று­மதி விலையை, 300 டால­ராக, மத்­திய அரசின் முக்­கிய அமைச்­ச­ரவை குழு நிர்­ண­யித்­தது.பொதுத் துறையை சேர்ந்த, எம்.எம்.டி.சி., பி.இ.சி., எஸ்.டி.சி., ஆகிய நிறு­வ­னங்கள் இணைந்து, கடந்த செப்­டம்பர் மாதத்தில், கோதுமை ஏற்­று­ம­திக்­கான ஒப்­பந்­தப்­புள்­ளி­களை வெளி­யிட்­டன.
நடப்பு அக்­டோபர் மாத துவக்­கத்தில், திறக்­கப்­பட்ட இந்த ஒப்­பந்­தப்­புள்­ளி­களில், மத்­திய அரசு நிர்­ண­யித்­ததை விட, 10 சத­வீதம் குறை­வாக, அதா­வது, ஒரு டன் கோது­மைக்கு,
அதி­க­பட்­ச­மாக, 269 டாலர் என்ற அளவில்,விலை குறிப்­பி­டப் பட்­டி­ருந்­தது. இதனால்,
கோது­மைக்கு நிர்­ண­யித்த குறைந்­த­பட்ச ஏற்­று­மதி விலையை விட, சர்­வ­தேச சந்­தையில் கூடுதல் விலை கிடைக்கும் என்ற அரசின் எதிர்­பார்ப்பு பொய்த்துப் போனது.இதை­ய­டுத்து, கோதுமை ஏற்­று­ம­திக்­கான ஒப்­பந்­தப்­புள்­ளியை, மத்­திய உணவு மற்றும் நுகர்வோர் விவ­கா­ரங்கள் அமைச்­சகம் ரத்து செய்­துள்­ளது.
கடந்த, 2012 – 13ம் நிதி­யாண்டில், 45 லட்சம்டன் கோதுமை ஏற்­று­மதி செய்­யப் ­பட்­டது.
அப்­போது, சர்­வ­தேசச் சந்­தையில், ஒரு டன் இந்­திய கோது­மைக்கு, சரா­ச­ரி­யாக, 305 டாலர் கிடைத்­தது.இதன் அடிப்­ப­டையில், நடப்பு நிதி­யாண்­டிற்கு, கோது­மைக்­கான குறைந்­த­பட்ச ஏற்­று­மதி விலையை, 300 டால­ராக, மத்­திய அரசு நிர்­ண­யித்­தது
.
விலை சரிவு:ஆனால், தற்­போது, சர்­வ­தேச சந்­தையில் கோதுமை வரத்து
அதி­க­ரித்­துள்­ளதால், அதன் விலை சரி­வ­டைந்­துள்­ளது. ஒரு, டன் கோதுமை, 267 டால­ருக்கு விற்­கப்­ப­டு­கி­றது.இதன் கார­ண­மா­கவே, இறக்­கு­ம­தி­யா­ளர்கள், ஒரு டன் கோது­மைக்கு, 269 டாலர் என, குறிப்­பிட்டு இருந்­தனர்.
கடந்த செப்­டம்பர் மாதத்தில், ஒப்­பந்­தப்­புள்ளி வெளி­யி­டப்­பட்­ட­போது, சிகாகோ வர்த்­தக வாரி­யத்தில், ஒரு டன் கோது­மையின் விலை, 233 டால­ராக இருந்­தது. இது, நடப்பு அக்­டோபர் மாதத்தில், 257 டால­ராக உயர்ந்­துள்­ளது.எனினும், இந்த விலைக்கும், மத்­திய அரசு, கோது­மைக்கு நிர்­ண­யித்­துள்ள குறைந்­த­பட்ச ஏற்­று­மதி விலைக்கும் இடையே, டன்­னுக்கு, 43 டாலர் வித்­தி­யாசம் உள்­ளது.இதனால், பன்­னாட்டு நிறு­வ­னங்கள், கோதுமை இறக்­கு­ம­திக்கு, மிகக் குறைந்த விலையை குறிப்­பிட்­டுள்­ளன என, இந்­திய உணவு கழக (எப்.சி.ஐ.,) அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
அக்­டோபர், 1ம் தேதி நில­வ­ரப்­படி, எப்.சி.ஐ., ன் கிடங்­கு­களில், 3.51 கோடி டன் கோதுமை உள்­ளது. இது, இருப்பு வைக்க வேண்­டிய அள­வான, 41 லட்சம் டன்னை விட, எட்டு மடங்கு அதி­க­மாகும்.இந்­நி­லையில், விவ­சா­யி­க­ளிடம் இருந்து கொள்­முதல் செய்யும் கோது­மையை பாது­காப்­பாக வைக்க, போதிய கிடங்கு வசதி இல்­லாமல் உள்­ளது. இப்­பி­ரச்­னைக்கு, கோதுமை ஏற்­று­மதி மூலம் ஓர­ளவு தீர்வு காண, எப்.சி.ஐ. முயன்­றது.
சர்வதேச நிலவரம்:ஆனால், சர்­வ­தேச நில­வ­ரத்தை கருத்தில் கொள்­ளாமல், மத்­திய அரசு, கோதுமை ஏற்­று­மதி விலையை நிர்­ண­யித்­ததால், அம்­மு­யற்­சியும் தடை­பட்­டு
உள்­ளது.அடுத்த வாரம் நடை­பெற உள்ள, முக்­கிய அமைச்­சர்கள் குழு கூட்­டத்தில், கோதுமை ஏற்­று­ம­திக்­கான புதிய விலை நிர்­ண­யிக்­கப்­படும் என, தெரி­கி­றது. இதை­ய­டுத்து, அடுத்த மாதம், கோதுமை ஏற்­று­ம­திக்கு புதிய ஒப்­பந்­தப்­புள்­ளிகள் கோரப்­படும் என, அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.
உலக உற்­பத்தி:நடப்­பாண்டு, பல நாடு­களில் கோதுமை உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது. இதனால் சர்­வ­தேச சந்­தையில், கோதுமை உற்­பத்தி, கடந்த ஆண்டை விட, 6.8 சத­வீதம் அதி­க­ரித்து, 70.40 கோடி டன்­னாக உயரும் என, ஐ.நா., மதிப்­பிட்­டுள்­ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)