பதிவு செய்த நாள்
28 அக்2013
14:47

சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா சி என்ற டூயல் சிம் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 21,490.ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு, இந்த மாதத் தொடக்கத்தில், இணைய தளங்களில் விற்பனைக்கெனக் கொண்டு வரப்பட்ட சோனி எக்ஸ்பீரியா சி ஸ்மார்ட் போன், இப்போது அனைத்து விற்பனை நிலையங்களிலும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் திறன் கொண்டது. ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 8 எம்பி திறன் கொண்ட கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், வீடியோ பதிவு, 0.3 எம்பி திறனுடன் முன்புறக் கேமரா எனப் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இரண்டு சிம்களை இந்த போன் இயக்குகிறது. இதன் தடிமன் 8.88 மிமீ. எடை 153 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 1ஜிபி ராம் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையில் 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 2390 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 21,490. ஏர்டெல் நிறுவனம் மூலம் வாங்குபவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக இணையத்திலிருந்து இறக்கிக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். மற்றும் வாங்கிய பின்னர், ஆறு மாத காலத்தில், விபத்தில் சேதமடைந்தால், இழப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|