துட்டுக்கு தட்டுப்பாடு: சில்லறையின்றி வர்த்தகர்கள் தவிப்பு; 100 ரூபாய்க்கு 10 சதவீதம் கமிஷன்துட்டுக்கு தட்டுப்பாடு: சில்லறையின்றி வர்த்தகர்கள் தவிப்பு; 100 ... ... இணைத்தல், கையகப்படுத்தலில்இந்தியாவுக்கு இரண்டாவது இடம் இணைத்தல், கையகப்படுத்தலில்இந்தியாவுக்கு இரண்டாவது இடம் ...
நிலையில்லாத தங்கம் விலையால் தீபாவளி விற்பனை மந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2013
00:50

தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுவதால், தீபாவளி விற்பனை மந்தமாக உள்ளது.அட்சய திருதியை, தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில், பொதுமக்கள், தங்கம் வாங்க அதிக முக்கியத்துவம் கொடுப்பர். இதனால், இந்த தினங்களில், சராசரியை விட, தங்க ஆபரணங்கள் விற்பனை கூடுதலாக இருக்கும்.
இறக்குமதி:நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்து வருவதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.குறிப்பாக, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, தங்க கட்டி மீதான சுங்கவரி, 6 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியாகும், தங்க ஆபரணங்கள் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. தங்க காசுகள், பதக்கங்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நாள்தோறும், சராசரியாக, புதிய மற்றும் பழைய தங்கம் விற்பனை, 1,000 கிலோ என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த தங்கத்தில், 70 சதவீதம், சென்னையில் மட்டும் விற்பனையாகிறது.பொதுவாக தீபாவளியின் போது, தங்கம் விற்பனை, சராசரி விற்பனையை விட, 20 சதவீதம் கூடுதலாக இருக்கும். குறிப்பாக, தீபாவளிக்கு முந்தைய, நான்கு நாட்களில் மட்டும், தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும்.
தங்கம் இருப்பு:இந்நிலையில், மத்திய அரசு தங்கம் இறக்குமதி மீது, கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், உள்நாட்டு சந்தையில், தங்கம் இருப்பு குறைவாக உள்ளது. இதனால், தங்கம் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. எனவே, மக்கள் தங்கம் வாங்க தயங்குகின்றனர்.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “சந்தையில், தங்கம் இல்லாததால், அதிக விலை கொடுத்து, தங்கம் வாங்க வேண்டியுள்ளது. தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுவதால், மக்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவதை குறைத்துள்ளனர். இதனால், நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், தங்கம் விற்பனை, 20 - 25 சதவீதம் குறைந்துள்ளது,” என்றார்.- நமது நிருபர் -



5 ஆண்டு நிலவரம்கடந்த, ஐந்து ஆண்டுகளாக, தீபாவளியின் போது விற்பனையான, 22 காரட் ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை நிலவரம்ஆண்டு விலை27.10.2008 1,12517.10.2009 1,4735.11.2010 1,83226.10.2011 2,51613.11.2012 2,9982.11.2013 2,950* *எதிர்பார்க்கப்படும் விலை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)