நாளொன்றுக்கு 10 லட்சம் சாதனங்கள்நாளொன்றுக்கு 10 லட்சம் சாதனங்கள் ... டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 63.24 ஆக கடும் சரிவு:நிலைக்கு வரும் - சிதம்பரம் நம்பிக்கை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 63.24 ஆக கடும் சரிவு:நிலைக்கு வரும் - ... ...
நாட்டின் ஏற்­று­மதி ரூ.1.64 லட்சம் கோடி­யாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2013
00:20

புது­டில்லி:நடப்பு 2013–14ம் நிதி­யாண்டின் ஏப்ரல் முதல், நாட்டின் ஏற்­று­மதி தொடர்ச்­சி­யாக உயர்ந்து வரு­கி­றது. இதை­ய­டுத்து, சென்ற அக்­டோபர் மாதத்தில், நாட்டின் மொத்த ஏற்­று­மதி, 2,727 கோடி டால­ராக (1,63,620 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்­டுள்­ளது.இது, கடந்த நிதி­யாண்டின் இதே மாதத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஏற்­று­ம­தியை (2,403 கோடி டாலர்) விட, 13.47 சத­வீதம் அதிகம் என, மத்­திய வர்த்­தக செயலர் எஸ்.ஆர்.ராவ் தெரி­வித்தார்.
வர்த்­தக பற்­றாக்­குறை:ஏற்­று­மதி அதி­க­ரித்­துள்ள அதே­நே­ரத்தில், சென்ற அக்­டோ­பரில், நாட்டின் இறக்­கு­மதி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 14.5 சத­வீதம் சரி­வ­டைந்து, ௪,424 கோடி டாலரிலிருந்து (௨,65,440 கோடி ரூபாய்) 3,782 கோடி டால­ராக (2,26,800 கோடி ரூபாய்) குறைந்­துள்­ளது.இதை­ய­டுத்து, சென்ற அக்­டோ­பரில் நாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை, 1,055 கோடி டால­ராக (63,360 கோடி ரூபாய்) மிகவும் சரி­வ­டைந்­துள்­ளது.
இது, கடந்­தாண்டின் இதே அக்­டோபர் மாதத்தில், 2,020 கோடி டால­ராக (1,21,200 கோடி ரூபாய்) மிகவும் அதி­க­ரித்து காணப்­பட்­டது.கணக்­கீட்டு மாதத்தில், ஏற்­று­மதி அதி­க­ரித்து, இறக்­கு­மதி குறைந்­துள்­ளதால், நாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை குறைந்­து உள்­ளது.அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பாவில், பொரு­ளா­தாரம் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்­கி­உள்­ள­தை­ய­டுத்து, அந்­நா­டு­க­ளுக்­கான ஏற்­று­மதி, சிறப்­பான அளவில் அதி­க­ரித்து வரு­கி­றது.நடப்பு நிதி­யாண்டில், 32,500 கோடி டாலர் (20 லட்சம் கோடி ரூபாய்) மதிப்­பிற்கு, ஏற்­று­மதி செய்ய இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய நிலை, தொடர்ந்து நீடிக்கும் பட்­சத்தில், நடப்பு நிதி­யாண்­டிற்­கான ஏற்­று­மதி இலக்கு எட்­டப்­படும் என, ராவ் குறிப்­பிட்டார்.
இறக்குமதி:நடப்பு நிதி­யாண்டின் ஏப்ரல் முதல் அக்­டோபர் வரை­யி­லான ஏழு மாத காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்­று­மதி, கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தை விட, 6.32 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 17,938 கோடி டால­ராக (10,76,280 கோடி ரூபாய்) அதி­க­ரித்­துள்­ளது.அதே­ச­மயம், இதே காலத்தில், நாட்டின் இறக்­கு­மதி, 3.8 சத­வீதம் குறைந்து, 27,006 கோடி டால­ராக (16,20,360 கோடி ரூபாய்) சரி­வ­டைந்­துள்­ளது. இதை­ய­டுத்து, மதிப்­பீட்டு காலத்தில், நாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை, 11,230 கோடி டால­ரி­லி­ருந்து, 9,068 கோடி டால­ராக குறைந்­துள்­ளது.தங்கம் இறக்­கு­மதி:சென்ற அக்­டோபர் மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்­கு­மதி, மதிப்பின் அடிப்­ப­டையில், 130 கோடி டால­ராக (7,800 கோடி ரூபாய்) மிகவும் குறைந்­துள்­ளது.
இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில், 680 கோடி டால­ராக (40,800 கோடி ரூபாய்) மிகவும் அதி­க­ரித்­தி­ருந்­தது. இருப்­பினும் கணக்­கீட்டுமாதத்தில், கச்சா எண்ணெய் இறக்­கு­மதி, 1.7 சத­வீதம் உயர்ந்து, 1,520 கோடி டால­ராக இருந்­தது.பொறி­யியல் துறையின் ஏற்­று­மதி, 36 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 560 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது, என, ராவ் மேலும் தெரி­வித்தார்.கடந்த 2012–13ம் நிதி­ஆண்டில், நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 4.8 சத­வீதம் அல்­லது 8,800 கோடி டால­ராக மிகவும் அதி­க­ரித்­தி­ருந்­தது.இதை கட்­டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. குறிப்­பாக, நடப்பு நிதி­யாண்டில், நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை, 3.7 சத­வீதம் அல்­லது 7,000 கோடி டால­ராக குறைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
இதற்­காக, மத்­திய அரசு, அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களின் இறக்­கு­ம­தியை குறைக்கும் வகையில், அவற்றின் மீதான சுங்க வரியை அதி­க­ரித்­தது.ஆபரணங்கள்:தங்கம் இறக்­கு­மதி மீதான சுங்­க­ வரி, 10 சத­வீ­த­மா­கவும், தங்க ஆப­ர­ணங்கள் மீதான இறக்­கு­மதி வரி, 15 சத­வீ­த­மா­கவும் அதி­க­ரிக்­கப்­பட்­டது.இவை தவிர, தங்க நாண­யங்கள், பதக்­கங்கள் போன்­ற­வற்றின் இறக்­கு­ம­திக்கு, ரிசர்வ் வங்கி, தடை விதித்­தது.அதே­நே­ரத்தில், இறக்­கு­மதிசெய்­யப்­படும் மொத்த தங்கத்தில்,20 சத­வீத தங்­கத்தை ஆப­ர­ணங்­க­ளாக தயா­ரித்து, ஏற்­று­மதிசெய்ய வேண்டும் என்ற கட்­டுப் ­பாட்­டையும் அறி­வித்­தது.இது போன்ற கார­ணங்­களால்,இறக்­கு­மதி குறைந்­துள்­ளது. அதே­ச­மயம், ஏற்­று­மதி அதி­க­ரித்துவரு­வதால், அது, நாட்டின் நடப்புகணக்கு பற்­றாக்­கு­றையை குறைக்க வழி­வ­குக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)