அன்­னிய செலா­வணி கையி­ருப்பு:28,211 கோடி டால­ராக அதிகரிப்புஅன்­னிய செலா­வணி கையி­ருப்பு:28,211 கோடி டால­ராக அதிகரிப்பு ... வெளிநாடுகளில் தேவை உயர்வால் இஞ்சி விலை குறைய வாய்ப்பில்லை வெளிநாடுகளில் தேவை உயர்வால் இஞ்சி விலை குறைய வாய்ப்பில்லை ...
இந்­திய காய்­க­றி­களில் பூச்சி மருந்து அதிகம் : சவுதி அரே­பியா எச்­ச­ரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2013
00:17

இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­ம­தி­ஆகும் காய்­க­றி­களில், நிர்­ண­யிக்­கப்­பட்ட அளவை விட, அதிக அளவில் பூச்சி மருந்து கலந்­துள்­ள­தாக, சவுதி அரே­பிய அரசு குற்றம் சாட்டி உள்­ளது.இதே­நிலை தொடர்ந்தால், கடும் நடவ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் எச்ச­ரித்துள்­ளது.
காய்கறி ஏற்றுமதிகடந்த 2012–13ம் நிதி­யாண்டில், இந்­தி­யாவின் காய்­க­றிகள் ஏற்­று­மதி, 1,334 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, இதற்கு முந்­தைய, 2011–12ம் நிதியாண்டில், 1,299 கோடி ரூபா­யாக இருந்­தது. ஆக, சென்ற நிதி­யாண்டில், இந்­தி­யாவின் காய்­கறி ஏற்­று­மதி, 2.7 சதவீதம் அதி­க­ரித்து உள்­ளது.
இந்­தி­யாவின் ஒட்­டு­மொத்த காய்­கறி ஏற்­று­ம­தியில், மேற்கு ஆசிய நாடு­களின் பங்­க­ளிப்பு, 33 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உள்­ளது. குறிப்­பாக, ஐக்­கிய அரபு நாடுகள், சவுதி அரே­பியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் உள்­ளிட்ட நாடுகள், அதிக அளவில், இந்­திய காய்­க­றி­களை இறக்­கு­மதி செய்து கொள்­கின்­றன.இருந்த போதிலும், சென்ற, 2012–13ம் நிதி­யாண்டில், அதிக அளவில், இந்திய காய்­க­றி­களை இறக்­கு­மதி செய்ததில், பாகிஸ்தான் முத­லி­டத்தில் உள்­ளது. அவ்வாண்டில், 284 கோடி ரூபாய் மதிப்­பிலான இந்­திய காய்­க­றி­களை, பாகிஸ்தான் இறக்­கு­மதி செய்து உள்­ளது.
இதற்கு அடுத்த இடத்தில், ஐக்­கிய அரபு நாடுகள் உள்­ளது. இதில், இடம் பெற்­றுள்ள நாடுகள், 255 கோடி ரூபாய் மதிப்­பி­லான காய்­க­றி­களை, இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்து உள்­ளன.சவுதி அரே­பியா, 92 கோடி ரூபாய் மதிப்­பி­லான காய்­க­றி­களை, இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­துள்­ளது.இறக்குமதி அதிகரிப்புசவுதி அரே­பி­யாவின், இந்­திய காய்கறி இறக்­கு­மதி, ஆண்­டுக்­காண்டு அதி­க­ரித்து வரு­கி­றது. கடந்த 2010–11ம் நிதி­யாண்டில், சவுதி அரே­பியா, இந்­தி­யாவில் இருந்து, 66 கோடி ரூபாய் மதிப்­பி­லான காய்­க­றி­களை, இறக்­கு­மதி செய்­தி­ருந்­தது. இது, சென்ற 2013–14ம் நிதி­யாண்டில், 85 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தது. சென்ற நிதி­யாண்டில், கூடு­த­லாக, 7 கோடி ரூபாய்க்கு இந்­திய காய்­க­றி­களை, இந்­நாடு இறக்­கு­மதி செய்து உள்­ளது.
இந்­நி­லையில், இத்­த­கைய வளர்ச்­சிக்கு வேட்டு வைக்கும் வித­மாக, நடப்பு நிதி­யாண்டில், இந்­தி­யாவில் இருந்து, இரண்டு சரக்கு பெட்­ட­கங்­களில் அனுப்பி வைக்­கப்­பட்ட, பச்சை மிள­காயில், நிர்ண­யிக்­கப்­பட்­டதை விட, அதிக அளவில் பூச்சி மருந்து உள்­ள­தாக, சவுதி அரே­பிய அரசு குற்றம் சாட்டி உள்­ளது.
இது­கு­றித்து, இந்­திய வேளாண் மற்றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவுப் பொருட்கள் மேம்­பாட்டு ஆணை­யத்­திற்கும் (அபிடா), சவுதி அரே­பிய அரசு கடிதம் எழுதி உள்­ளது.அக்­க­டி­தத்தில், அண்­மையில், இந்தி­யா வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட காய்­க­றி­களில், அனு­ம­திக்­கப்­பட்­டதை விட, கூடு­த­லாக, பூச்சி மருந்து படிமம் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் காலத்தில், சவுதி அரே­பிய அரசு, கடும் நட­வ­டிக்கை எடுக்கும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பரிசோதனை:இதை­ய­டுத்து, அனைத்து ஏற்­று­மதியாளர்­க­ளுக்கும், ‘அபிடா’ அமைப்பு கடிதம் அனுப்­பி­யுள்­ளது. அதில், சவுதி அரே­பி­யாவின் இறக்­கு­மதி விதி­முறை­களை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து காய்­க­றி­களும், ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­பாக, பரி­சோதனைக்கு உட்­ப­டுத்த வேண்டும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.சவுதி அரே­பியா, பூச்சி மருந்து படிம அளவு குறித்து எதுவும் தெரி­விக்­க­வில்லை.
இருந்த போதிலும், ஐரோப்­பிய கூட்ட­மைப்பு நாடுகள் பின்­பற்றும், விதி­மு­றை­களின் படி, இனி, இந்­திய ஏற்­று­மதி­யா­ளர்கள், சவுதி அரே­பி­யா­விற்கு காய்­க­றி­களை அனுப்ப வேண்டும்.மேலும், சவுதி அரே­பி­யா­விற்கு, புத்தம் புதிய காய்­க­றி­களை அனுப்பும் போது, ‘கோடெக்ஸ்’ மற்றும் இதர சர்வ­தேச விதி­மு­றை­க­ளையும், இந்­திய ஏற்று­ம­தி­யா­ளர்கள் பின்­பற்­றுவர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பாகிஸ்தான் முத­லிடம்:சென்ற நிதி­யாண்டில், இந்­தி­யாவின் காய்­கறி ஏற்­று­ம­தியில், பாகிஸ்தான் (284 கோடி ரூபாய்) முதலி­டத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களில், ஐக்­கிய அரபு நாடுகள் (255 கோடி ரூபாய்), இங்­கி­லாந்து (151 கோடி ரூபாய்), நேபாளம் (143 கோடி ரூபாய்) ஆகியவை உள்­ளன.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)