பதிவு செய்த நாள்
17 நவ2013
00:07

மும்பை;நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, சென்ற 8ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 82 கோடி டாலர் (5,136 கோடி ரூபாய்) அதிகரித்து, 28,211 கோடி டாலராக (17.67 லட்சம் கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி ெவளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 166 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 28,129 டாலராக இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 83 கோடி டாலர் உயர்ந்து, 25,444 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, மாற்றம் எதுவுமின்றி, 2,123 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.அதேசமயம், கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு 70 லட்சம் டாலர் சரிவடைந்து, 441.55 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்து உள்ள செலாவணிகளின் மதிப்பு, 32 லட்சம் டாலர் குறைந்து, 203 கோடி டாலராகவும் உள்ளது என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|