என்.எம்.டீ.சி., 161 லட்சம் டன் இரும்பு தாது விற்­பனைஎன்.எம்.டீ.சி., 161 லட்சம் டன் இரும்பு தாது விற்­பனை ... கண்ட்லா துறை­மு­கத்தில் புதி­தாக இரண்டு டெர்­மி­னல்கள் கண்ட்லா துறை­மு­கத்தில் புதி­தாக இரண்டு டெர்­மி­னல்கள் ...
சேவை வரியை வட்­டி­யின்றி செலுத்த அரசு சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2013
00:36

ஈரோடு: எளி­மைப்­ப­டுத்­தப்­பட்ட முறையை பயன்­ப­டுத்தி, சேவை வரியை செலுத்த, கலால் மற்றும் சுங்க வரித்­துறை அழைப்பு விடுத்து உள்­ளது.பொது மன்­னிப்பு திட்­டம்சேவை வரியின் கீழ் பதிவு செய்து, அச்­சட்­டத்தை சரி­வர கடை­பி­டிக்­காமல் இருப்­ப­வர்கள், சேவை வரி செலுத்த வேண்­டி­ய­வர்­க­ளாக இருந்தும், அச்­சட்­டத்தின் கீழ் பதிவு செய்யா­த­வர்கள் பயன் பெறும் வகையில், மத்­திய அரசு பொது மன்­னிப்பு திட்­டத்தை அறி­வித்­து உள்­ளது.
இதற்கு ‘சேவை வரி தன்னார்வ இணக்க ஊக்­கு­விப்பு திட்டம் 2013’ என, பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. சென்ற மே, 10ம் தேதி இத்­திட்டம் அமல்­படுத்தப்­பட்­டது.2007ம் ஆண்டு, அக்­டோபர் முதல், 2012 டிசம்பர் வரை சேவை வரி செலுத்­தா­த­வர்கள், இத்­திட்­டத்தின் கீழ், ‘வி.சி.இ.எஸ்1’ என்ற படி­வத்தை பூர்த்தி செய்து, கலால் மற்றும் சுங்க வரித்­துறை அலு­வ­ல­ரிடம் சமர்­பிக்க வேண்டும்.இதில், 50 சத­வீத தொகையை, இந்­தாண்டு இறு­திக்குள் செலுத்த வேண்டும். அத்­தொகை, இந்­தாண்டு மார்ச் மாதத்­துக்கு முன்­ன­ தாக செலுத்தி இருக்க கூடாது.
மீத­முள்ள, 50 சத­வீத வரியை, 2014ம் ஆண்டு ஜூன் வரை வட்டி­யின்றி செலுத்­தலாம்.கால அவ­கா­சத்­துக்குள் வரி செலுத்­தா­விட்டால், அடுத்­தாண்டு இறு­திக்குள், 18 சத­வீத வட்­டி­யுடன் செலுத்த வேண்டும். வட்டி தொகை, 2014ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கணக்கிடப்­படும்.பணம் செலுத்­திய படி­வத்தை, உட­ன­டி­யாக அலு­வ­ல­கத்தில் சமர்­பிக்க வேண்டும். படிவம் தாக்கல் செய்த, ஏழு நாட்­களுக்குள் வரி அலு­வலரிடம் இருந்து, ‘வி.சி.இ.எஸ்2’ என்ற படி­வத்தில் ஒப்­புகை பெற வேண்டும்.முழு­மை­யாக வரி செலுத்­திய பின், வரி அலு­வ­ல­ருக்கு, ஏழு நாட்­க­ளுக்குள் தெரி­வித்து, ‘விசி.இ.எஸ்3’ என்ற படி­வத்தில் ஒப்­புகை பெற வேண்டும்.இத்­திட்­டத்தின் கீழ், சேவை வரி செலுத்­து­ப­வர்­க­ளுக்கு அப­ராதம், வட்டி, சிறை தண்­ட­னை­களில் இருந்து விலக்கு அளிக்கப்­ப­டு­கி­றது.
வரித்­தொ­கையை பண­மாக மட்டும் செலுத்த வேண்டும். இந்­தாண்டு ஜன­வரி மற்றும் அதன் பின் செலுத்த வேண்­டிய வரி தொகையை, வட்­டி­யுடன் செலுத்த வேண்டும்.‘வி.சி.இ.எஸ்1’ படிவம் சமர்­பிக்கும் போது செலுத்த வேண்­டி­ய­வரின் கணக்­கு­களை, ஆறு மாதத்­துக்கு ஒரு முறை சமர்­பிக்கும் ‘எஸ்.டி.3’ என்ற படி­வத்தில் உள்ள அட்­ட­வ­ணைப்­படி சமர்­பிக்க வேண்டும்.சேவை வரி படி­வத்தை நேர்­மை­யாக தாக்கல் செய்து, ஆனால் வரியை செலுத்த தவறி­ய­வர்கள், சேவை வரி சட்­டப்­படி, 2013ம் ஆண்டு மார்ச்­சுக்கு முன் சோத­னைக்கு உள்­ளா­ன­வர்கள், சேவை வரி சட்­டப்­பி­ரிவு, 72, 73ன்படி மார்ச் மாதத்­துக்கு முன் விளக்க அறிக்கை கேட்டு, நோட்டீஸ் பெற்­ற­வர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. சுங்க அலு­வ­ல­கம்:மேலும், தணிக்கை கடிதம் பெற்­ற­வர்களுக்கும், சுங்க அலு­வ­ல­கத்தில் இருந்து கணக்­கு­களை சமர்­பிக்­கும்­படி கோரப்­பட்ட கடிதம் பெற்­ற­வர்­க­ளுக்கும், இத்­திட்டம் பொருந்­தாது, என, அறிவிக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)