பதிவு செய்த நாள்
19 நவ2013
00:36

புதுடில்லி,: நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி, 5.2 – 5.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இது, கடந்த நிதியாண்டை விட, 3 மடங்கு அதிகம் என, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் (சி.ஏ.சி.பி.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு வேளாண் பருவத்தில் (ஜூலை – ஜூன்), பல மாநிலங்களில் பருவமழை பொழிவு நன்கு இருந்ததையடுத்து, சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில், வேளாண் உற்பத்தி புதிய சாதனை அளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.2 – 5.7 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.9 சதவீதம் என்ற அளவில், மிகவும் சரிவடைந்து காணப்பட்டது.சாதகமான தட்பவெப்ப சூழல் உள்ளதால், கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பு நிதியாண்டில், வேளாண் மகசூல் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, சி.ஏ.சி.பி., புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|