பதிவு செய்த நாள்
19 நவ2013
00:37

மும்பை: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திர (என்.சி.டீ.,) வெளியீடுகள் வாயிலாக, 16,279 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.15 நிறுவனங்கள்கடந்த 2012–13ம் நிதியாண்டில், 15 நிறுவனங்கள், மேற்கண்ட வெளியீடுகள் வாயிலாக, 17 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டி கொண்டன.
இதற்கு முந்தைய ௨௦௧௧ – ௨௦௧௨ம் நிதியாண்டில், 16 நிறுவனங்கள், என்.சி.டீ., வாயிலாக, 35,611 கோடி ரூபாயை திரட்டி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.பங்கு சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பல நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திர வெளியீடுகள் வாயிலாக நிதி ஆதாரத்தை திரட்டி கொள்வதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கு முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு உள்ளது.வங்கிகளில், 5 ஆண்டு காலத்திற்கு மேற்கொள்ளப்படும் குறித்த கால டெபாசிட்டிற்கு, 8.75 சதவீத வட்டி வருவாய் கிடைக்கும். வட்டி வருவாய்அதேநேரத்தில், என்.சி.டீ., வெளியீடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, இதே காலத்திற்கு, 10 முதல் 12 சதவீதம் வரை வட்டி வருவாய் கிடைக்கிறது.இதன் காரணமாகவே, என்.சி.டீ., வெளியீடுகளில் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|