பதிவு செய்த நாள்
20 நவ2013
16:51

மும்பை : கடந்த நான்கு நாட்களாக ஏற்றத்தில் காணப்பட்ட இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் சரிவடைந்தன. சென்செக்ஸ் 256 புள்ளிகளும், நிப்டி 80 புள்ளிகளும் சரிந்தன.
உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் மற்றும் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது, அதன்காரணமாக ஆட்டோமொபைல், நுகர்வோம் மற்றும் வங்கி தொடர்பான பங்குகள் விலை சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 255.69 புள்ளிகள் சரிந்து 20,635.13-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 80.45 புள்ளிகள் சரிந்து 6,122.90-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் அநேக பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக கடைசி 30 நிமிடத்தில் ஐசிஐசிஐ., இன்போசிஸ், எச்.டி.எப்.சி., எல்அண்டுடி, பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ போன்ற நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|