பதிவு செய்த நாள்
21 நவ2013
00:27
சென்னை,: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 96 ரூபாய் உயர்ந்து, 23,208 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்ததால், உள்நாட்டில், சில தினங்களாக இதன் விலை குறைந்திருந்தது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,889 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,112 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,590 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 12 ரூபாய்க்கு உயர்ந்து, 2,901 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 96 ரூபாய் அதிகரித்து, 23,208 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 130 ரூபாய் உயர்ந்து, 30,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 49.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 45,890 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|