நாட்டின் மறைமுக வரி வசூல்ரூ.2.69 லட்சம் கோடியாக உயர்வுநாட்டின் மறைமுக வரி வசூல்ரூ.2.69 லட்சம் கோடியாக உயர்வு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.120 குறைந்தது ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.120 குறைந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு 62.94 ஆக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2013
00:58

மும்பை,: டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைந்து உள்ளது. நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 62.58 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, மேலும், 36 காசுகள் குறைந்து, 62.94ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.87 ஆக இருந்தது.
இது, வர்த்தகத்தின் இடையே, 62.59 – 62.96 வரை, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என, கடந்த மாதம் நடைபெற்ற, அமெரிக்க மத்திய வங்கியின், வெளிச் சந்தை குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது குறித்த தகவல் நேற்று வெளியானது. இதையடுத்து, அன்னியச் செலாவணி சந்தையில், முதலீட்டாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொண்டனர்.
அதே சமயம், டாலருக்கான தேவையும் அதிகம் இருந்தது. இத்துடன், எண்ணெய் நிறுவனங்களும் அதிக அளவில் டாலரை வாங்கியதால், அதன் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவடைந்தது.நடப்பாண்டு, ஜனவரி முதல் தற்போது வரை ரூபாய் மதிப்பு, 12.52சதவீதம் குறைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய கரன்சிகளில், இந்தோனேஷியாவின் ருப்யா மதிப்பு, 16.37 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஐப்பானின் யென், 13.58 சதவீதம் வீழ்ச்சி கண்டு, இரண்டாவது இடத்தில் உள்ளது. மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், இந்தியாவின் ரூபாய், மூன்றாவது இடத்தில் உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)