பதிவு செய்த நாள்
25 நவ2013
05:03

புதுடில்லி:கடந்த சில வாரங்களில், மத்திய அரசு, 11.5 லட்சம் டன் கோதுமையை, வெளிச் சந்தையில் விற்பனை செய்து உள்ளது. இவற்றில், 5.50 லட்சம் டன்னுக்கும் அதிகமான கோதுமை, டில்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கையிருப்பு:அளவிற்கு அதிகமான கோதுமை உற்பத்தி மற்றும் கையிருப்பை பாதுகாப்பாக வைக்க போதிய கிடங்கு வசதிகள் இல்லாதது போன்ற வற்றால், மத்திய அரசு, கோதுமையை வெளிச் சந்தையில் விற்பனை செய்து வருகிறது.இவற்றை, மாவு ஆலைகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர், மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.இந்த வகையில், வரும், 2014ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், 85 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.சென்ற, 2012–13ம் நிதியாண்டில், 9.24 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டது.
இந்திய உணவு கழகம்:நடப்பு நவம்பர் மாத துவக்க நிலவரப்படி, பொதுத் துறையை சேர்ந்த, இந்திய உணவு கழகத்திடம், 3.40 கோடி டன் கோதுமை கையிருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இருப்பு வைக்க வேண்டிய அளவை விட, அதிகமாகும்.போதிய கிடங்கு வசதியின்றி, வெட்ட வெளியில் வைக்கப்படும் கோதுமை, மழை மற்றும் பனிப்பொழிவால் பாழாவதை தடுக்க, அதனை வெளிச்சந்தையில் விற்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
போக்குவரத்து செலவு:இதையடுத்து, இந்திய உணவு கழகம், வாரம்தோறும், மொத்த வியாபாரிகளுக்கு, ஒரு குவிண்டால், கோதுமையை 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இத்துடன் போக்குவரத்து செலவையும் கணக்கிட்டால், சராசரியாக, ஒரு குவிண்டால் கோதுமையின் விலை, 1,603 ரூபாயாகும்.கடந்த சில வாரங்களில், தமிழகம், மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வர்த்தகர்களுக்கு, முறையே, 65 ஆயிரம் டன், 64 ஆயிரம் டன், 58 ஆயிரம் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|