பதிவு செய்த நாள்
28 நவ2013
01:30

புதுடில்லி:நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 5.3 சதவீதம் குறைந்து, 1.56 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயன்பாடுஉலகளவில், பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டில், இந்தியா நான்காவது மிகப்பெரிய நாடாக உள்ளது. உள்நாட்டு தேவை யை பூர்த்தி செய்யும் அளவிற்கு,உற்பத்தி இல்லாததால், நம்நாடு,
75–80 சதவீத கச்சா எண்ணெயை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.17 பொதுத் துறை நிறுவனங்கள், இரண்டு கூட்டு நிறுவனங் கள் மற்றும் மூன்று தனியார் துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெயை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துசுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக, உள்நாட்டில், பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு குறைந்து வந்த நிலையில், சென்ற அக்டோபரில், இவற்றின் பயன்பாடு, 1 சதவீதம் அதிகரித்து,131 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என, பெட்ரோலிய பொருட்கள் திட்டமிடல் மற்றும் ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
டீசல் பயன்பாடு:கணக்கீட்டு மாதத்தில், உள்நாட்டில், டீசல் பயன்பாடு, 1.47 சதவீதம் குறைந்து, 56.16 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதற்கு, உள்நாட்டில், மின் தட்டுப்பாடு குறைந்துள்ளதும், தொழில் துறையில் டீசல் பயன்பாடு குறைந்துள்ளதும் தான் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.
மேலும், டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றிற்கான விலையில் உள்ள இடைவெளி குறைந்து வருவதால், டீசல் கார்கள் வாங்குவது குறைந்துள்ளது. இதனாலும், இதன் பயன்பாடு சரிவடைந்துள்ளது.அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், பெட்ரோல் பயன்பாடு,0.5 சதவீதம் அதிகரித்து, 14.62 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.கடந்த அக்டோபர் மாதம், உள்நாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தி, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 0.8 சதவீதம் குறைந்து, 32.04 லட்சம் டன்னிலிருந்து, 31.79 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.
இயற்கை எரிவாயுகணக்கீட்டு மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி,13.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 342.60 கோடி கன மீட்டரிலிருந்து, 296.10 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது.சென்ற அக்டோபர் மாதத்தில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு, ஒட்டு மொத்த அளவில், 3.2 சதவீதம் சரிவடைந்து, 192.96 லட்சம் டன்னிலிருந்து, 186.71 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
பல நிறுவனங்கள் பராமரிப்பு பணிகளுக்காக, சுத்திகரிப்பு நடவடிக்கைகளை குறைத்ததால், அக்டோபரில், ஒட்டு மொத்த அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு குறைந்துள்ளதாக, பெட்ரோலிய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.கடந்த 2004–05ம் நிதியாண்டிலிருந்து, நடப்பு 2013ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வரையிலுமாக, இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி, 68.87 சதவீதம் வளர்ச்சி கண்டு, 21.50 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இது, வரும் 2015–16ம் நிதியாண்டில், 26.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்இந்நிலையில், உள்நாட்டில், எண்ணெய் சுத்திகரிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்களிப்பு, 30 சதவீதமாக உள்ளது. இந்நிறுவனத்திற்கு, ஜாம் நகரில் இரண்டு சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.
இவற்றுள் ஒன்று, முழுவதும் ஏற்றுமதியின் அடிப்படையில், செயல்பட்டு வருகிறது. இவ்வாலையின் எண்ணெய் சுத்திகரிப்பு, சென்ற அக்டோபரில், 1.3 சதவீதம் உயர்ந்துள்ளது.இதன், மற்றொரு ஆலையின் சுத்திகரிப்பு, 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|