பதிவு செய்த நாள்
29 நவ2013
00:22
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 62.16ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 25 காசுகள் குறைந்து, 62.41 ஆக சரிவடைந்தது.நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.38 ஆக வீழ்ச்சி கண்டது. இது, ஒரு கட்டத்தில், 62.45 வரை சென்றது.
இறக்குமதி நிறுவனங்கள், மாத இறுதி கணக்கை முடிக்கும் நோக்கில், அதிக அளவில்டாலரை வாங்கி வருகின்றன.இதனால், டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயரவும், அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையவும் வழி வகுத்துள்ளது.நடப்பாண்டு ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 11.85 சதவீதம் குறைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிராக, மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், இந்தோனேஷியாவின் ருப்யா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், ஜப்பானின் யென், இந்திய ரூபாய் உள்ளிட்ட கரன்சிகள் உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|