இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு நிறுவனம்!இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு நிறுவனம்! ... முன்­னு­ரிமை பங்கு ஒதுக்கீடுமூலம் ரூ.3,366 கோடி திரட்டல் முன்­னு­ரிமை பங்கு ஒதுக்கீடுமூலம் ரூ.3,366 கோடி திரட்டல் ...
வெங்­காயம் ஏற்­று­மதி விலையை குறைக்க பரிந்­துரை : அதி­க வரத்தால் விலை குறைந்­துள்­ளது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2013
00:32

மும்பை: கடந்த ஒரு சில தினங்­­ளாக, வெங்­கா­யத்தின் விலை, கடந்த ஐந்து மாதங்­களில் இல்­லாத அள­விற்கு குறைந்­துள்­ளது. இதை­­டுத்து, வெங்­கா­யத்­திற்­கான குறைந்­­பட்ச ஏற்­று­­தி விலையை குறைக்க வேண்டும் என, மத்­திய வேளாண் அமைச்­சகம், அர­சுக்கு பரிந்­துரை செய்­து உள்­ளது.

பணவீக்கம்உற்­பத்தி குறைந்து, சந்­தை­­ளுக்கு வரத்து சரி­­டைந்­­ததால், பல மாநி­லங்­களில், ஒரு கிலோ வெங்­கா­யத்தின் விலை, 100 ரூபாயை தாண்­டி­யது. இதனால், நாட்டின் பண­வீக்கம் அதி­­ரித்­­துடன், பல மாநில அர­சு­­ளுக்கு கடும் பிரச்­னையை ஏற்­­டுத்­தி­யது.இந்­நி­லையில், கடந்த ஒரு சில வாரங்­­ளாக, வெங்­காயம் அதி­­ளவில் உற்­பத்­தி­யாகும், மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா மற்றும்ஆந்­திரா ஆகிய மாநி­லங்­­ளி­லி­ருந்து, வரத்து அதி­­ரித்­துள்­ளதால், மகா­ராஷ்­டி­ராவில் உள்ள லசல்கான் சந்­தையில், தற்­போது, ஒரு குவிண்டால் வெங்­கா­யத்தின் விலை, 1,700 ரூபா­யாக சரி­­டைந்­துள்­ளது.

இது, கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி, 1,690 ரூபா­யாக இருந்­தது. நடப்­பாண்டு செப்­டம்பர் 17ம் தேதி, இச்­சந்­தையில், இதன் விலை, 5,500 ரூபா­யாக மிகவும் அதி­­ரித்து காணப்­பட்­டது.உற்பத்திஅண்­மையில் முடி­வுற்ற கரீப் பரு­வத்தில் உற்­பத்தி செய்­யப்­பட்ட வெங்­காயம், சந்­தை­­ளுக்கு அதி­­ளவில் வரத் துவங்­கி­யுள்­ளது. கடந்­தாண்டு கரீப் பரு­வத்தை விட, நடப்­பாண்டு கரீப் பரு­வத்தில் இதன் உற்­பத்தி, சிறப்­பான அளவில் அதி­­ரித்­து உள்­ளது. இதனால், இதன் விலை மேலும் சரி­­டையும் என, தேசிய தோட்­டக்­கலை ஆராய்ச்சி மற்றும் மேம்­பாட்டு அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

சென்ற மாதம் 1ம் தேதி சந்­தை­ ­ளுக்கு, வெங்காயம் வரத்து, 7,500 டன்­னாக இருந்­தது. இது, சென்ற மாத இறு­தியில், 15 ஆயிரம் டன்­னாக அதி­­ரித்­துள்­ளது.தற்­போது, சில்­லரை விற்­­னையில், டில்­லியில், ஒரு கிலோ வெங்­கா­யத்தின் விலை, 46 ரூபாய்க்கும், மும்­பையில், 62 ரூபாய்க்கும் விற்­­னை­யா­கி­றது.

இது­கு­றித்து, தேசிய வேளாண் கூட்­டு­றவு சந்­தைப்­­டுத்தும் அமைப்பின் இயக்­குனர் சி.பீ. கோல்கர் கூறி­­தா­வது:கரீப் பரு­வத்தில், வெங்­காயம் விளைச்சல் அதி­­ரித்­துள்­ளது. இதை­­டுத்து, நாட்டின் பல சந்­தை­­ளுக்கு வெங்­காயம் வரத்து அதி­­ரித்­துள்­ளது. இதனால், இதன் விலை படிப்­­டி­யாக குறையத் துவங்­கி­யுள்­ளது.நடப்பு ரபி பரு­வத்­திலும், வெங்­காயம் சாகு­படி பரப்பு அதி­­ரித்­துள்­ளது. இதனால், இனி வரும் மாதங்­களில், இதன் விலை மேலும் சரி­­டையத் துவங்கும்.அதே­­மயம், ஒரு குவிண்டால் வெங்­கா­யத்தின் விலை, 1,000 ரூபாய்க்கும் கீழ் குறையும் நிலையில், அது, விவ­சா­யி­­ளுக்கு இடர்­பாட்டை ஏற்­­டுத்தும்.

இவ்­வாறு அவர் கூறினார்.ஏற்­று­மதி விலைஉள்­நாட்டில், வெங்­கா­யத்தின் விலை வர­லாறு கணாத அள­விற்கு உயர்ந்­­தை­­டுத்து, மத்­திய அரசு, கடந்த நவம்பர் 1ம் தேதி, ஏற்­று­­திக்­கான, ஒரு டன் வெங்­கா­யத்தின் விலையை, 1,150 டால­ராக உயர்த்­தி­யது. இதன்­படி, இதற்கும் குறை­வான விலையில் ஏற்­று­மதி மேற்­கொள்ள முடி­யாது.

இதற்கு முன்­பாக, ஏற்­று­­திக்­கான ஒரு டன் வெங்­கா­யத்தின் குறைந்­­பட்ச விலை, 900 டால­ராக இருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இருப்­பினும், ஐந்து மாநி­லங்­களில் சட்­­சபை தேர்தல் நடை­பெ­று­வதால், மத்­திய அரசு, வெங்­கா­யத்தின் ஏற்­று­மதி விலையை குறைப்­பது குறித்து முடி­வெ­டுக்­காது.

மலேசியா:பார்­லிமென்ட் கூட்டத் தொடர், வரும் 5ம் தேதி துவங்­கு­கி­றது.எனவே, இம்­மாதம் 15ம் தேதிக்கு பிறகே, ஏற்­று­­திக்­கான வெங்­காயத்தின் விலையை குறைப்­பது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என, சந்தை வட்­டா­ரத்­தினர் தெரி­வித்­தனர்.உல­­ளவில், இந்­திய வெங்­கா­யத்தின் சுவை நன்கு இருப்­பதால், மேற்­கா­சிய நாடுகள், மலே­சியா, சிங்­கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடு­களில், இந்­திய வெங்­கா­யத்­திற்கு அதிக வர­வேற்பு உள்­ளது.

கடந்த 2012–13ம் வேளாண் பரு­வத்தில், நாட்டின் வெங்­காயம் உற்­பத்தி, 1.63 கோடி டன்­னாக குறைந்­தி­ருந்­தது. இது, இதற்கு முந்­தைய பரு­வத்தில், 1.75 கோடி டன்­னாக இருந்­தது. நடப்பு பரு­வத்தில், உள்­நாட்டில் இதன் உற்­பத்தி நன்கு இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)