முன்­னு­ரிமை பங்கு ஒதுக்கீடுமூலம் ரூ.3,366 கோடி திரட்டல்முன்­னு­ரிமை பங்கு ஒதுக்கீடுமூலம் ரூ.3,366 கோடி திரட்டல் ... டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு ...
நடப்பு கணக்கு பற்­றாக்­குறை 520 கோடி டால­ராக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2013
00:36

மும்பை: நடப்பு 2013–14ம் நிதி­யாண்டின், செப்­டம்பர் வரை­யி­லான இரண்­டா­வது காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 520 கோடி டால­ராக சரி­வ­டைந்­துள்­ளது. இது, நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 1.2 சத­வீதம் என, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.தங்கம் இறக்குமதிமத்­திய அரசின் நட­வ­டிக்­கை­களால், தங்கம் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களின் இறக்­கு­மதி குறைந்­துள்­ளது.
அதே­ச­மயம், கடந்த ஒரு சில மாதங்­க­ளாக, நாட்டின் ஏற்­று­மதி அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையும் குறைந்­துள்­ளது.கடந்த 2012 – 13ம் நிதி­யாண்டின் இரண்­டா­வது காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 2,100 கோடி டால­ராக இருந்­தது. இது, நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 5 சத­வீ­த­மாக இருந்­தது. இது, நடப்பு நிதி­யாண்டின் முதல் காலாண்டில், 4.9 சத­வீ­த­மாக காணப்­பட்­டது. கணக்­கீட்டு காலாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்­று­மதி, 11.9சத­வீதம் வளர்ச்சி கண்டு, 8,120 கோடிடால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இதற்கு, ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள் மற்றும் ரசா­யனம் போன்­ற ­வற்றின் ஏற்­று­மதி அதி­க­ரித்­த­துதான் முக்­கிய கார­ண­மாகும்.மதிப்­பீட்டு காலாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த இறக்­கு­மதி, 4.8 சத­வீதம் சரி­வ­டைந்து, 11,450 கோடி டால­ராக குறைந்­துள்­ளது. கடந்த இரண்­டா­வது காலாண்டில், நாட்டின் தங்கம் இறக்­கு­மதி, 390 கோடி டால­ராக மிகவும் சரி­வ­டைந்­துள்­ளது.
இது, நடப்பு நிதி­யாண்டின் முதல் காலாண்டில், 1,640 கோடி டால­ரா­கவும், கடந்த நிதி­யாண்டின் இரண்­டா­வது காலாண்டில், 1,100 கோடி டால­ரா­கவும் இருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.கணக்­கீட்டு காலாண்டில், நாட்டின் வர்த்­தகப் பற்­றாக்­குறை, 4,780 கோடி டால­ரி­லி­ருந்து, 3,330 கோடி டால­ராக சரி­வ­டைந்­துள்­ளது.நடப்பு நிதி­யாண்டின் இரண்­டா­வது காலாண்டில், அன்­னிய நேரடி நிகர முத­லீடு, 690 கோடி டால­ராக அதி­க­ரித்து காணப்­பட்­டது.ஏற்றுமதிநடப்பு 2013ம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் நாட்டின் ஏற்­று­மதி அதி­க­ரித்து, இறக்­கு­மதி குறைந்து வரு­கி­றது. இதனால், நடப்பு நிதி­யாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 2,690 கோடி டால­ராக சரி­வ­டைந்­துள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே ஆறு மாத காலத்தில், 3,790 கோடி டால­ராக இருந்­தது என, ரிசர்வ் வங்­கியின் புள்­ளி­வி­வ­ரத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)