பதிவு செய்த நாள்
04 டிச2013
00:52

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று மோசமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
அமெரிக்க வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவர எதிர்பார்ப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, மோட்டார் வாகனம், நுகர்பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு மற்றும் உலோக துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 43.09 புள்ளிகள் சரிவடைந்து,20,854.92 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,927.05 புள்ளிகள் வரையிலும் குறைந்தபட்சமாக, 20,817.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30நிறுவனங்களுள், டாக்டர் ரெட்டீஸ் லேப், சேசா ஸ்டெர்லைட், எல் அண்டு டி உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், கெயில், ஜிந்தால் ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 16 புள்ளிகள் குறைந்து, 6,201.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,225.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,191.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|