பதிவு செய்த நாள்
05 டிச2013
02:39

புசா பாசுமதி 1509 ரகத்தின் வரவால், நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 40 லட்சம் டன்னை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, கடந்த நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (34.60 லட்சம் டன்) காட்டிலும், 11 சதவீதம் அதிகமாகும்.
புசா பாசுமதி ரகம்இந்திய வேளாண் ஆராய்ச்சிநிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட, புசா பாசுமதி 1509 ரக அரிசி, வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, நடப்பு கரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கு இப்புதிய ரகபாசுமதி அரிசியின் உற்பத்தி, 6.5 டன்னாக இருக்கும்.அதேசமயம், பாப்புலர் புசா 1121 ரக பாசுமதி விளைச்சல், ஒரு ஹெக்டேருக்கு, 4.5 டன் அளவிற்கே இருக்கும்.இதனுடன் ஒப்பிடும் போது, புதிய புசா ரக வரவால், ஒரு ஹெக்டேருக்கு, 1.5 டன் பாசுமதி அரிசி கூடுதலாக கிடைக்கும்.இதையடுத்து, நடப்பாண்டில், புசா ரக பாசுமதி அரிசி உற்பத்தி, 30 ஆயிரம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2010–11ம் நிதியாண்டில், நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 23.70 லட்சம் டன்னாக இருந்தது. இது, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 11,355 கோடியாகும்.இது, 2011–12ம் நிதியாண்டில் முறையே, 31.80 லட்சம் டன், 15,450 கோடி ரூபாயாக இருந்தது.சென்ற 2012–13ம் நிதியாண்டில், நம்நாட்டிலிருந்து, 19,409 கோடி ரூபாய் மதிப்பிலான, 34.60 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என, ‘அபெடா’ புள்ளிவிவரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துஇந்நிலையில், மேற்கு ஆசியா,இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில், இந்திய பாசுமதி அரிசிக்கான தேவை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.இதனை எடுத்துக்காட்டும் விதமாக, நடப்பு 2013–14ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்திலேயே, நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, 19.30 லட்சம் டன்னை தாண்டியுள்ளது. இதன் மதிப்பு, 14,118 கோடி ரூபாயாகும்.
எனவே, நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதி, 40 லட்சம் டன்னை எட்டும் என, இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.பி. ஜிண்டால் தெரிவித்தார்.கொத்தவரைசென்ற 2011–12ம் நிதியாண்டில், ஒட்டு மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், 16,523.87 கோடி ரூபாய் பங்களிப்புடன், கொத்தவரை ஏற்றுமதி முதலிடத்தில் இருந்தது. அப்போது, பாசுமதி அரிசி ஏற்றுமதி, 15,449.60 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.சென்ற 2012–13ம் நிதியாண்டில், இவற்றின் ஏற்றுமதி, முறையே, 21,287.01 கோடி ரூபாய் மற்றும் 19,419.39 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
ஆனால், நடப்பு நிதியாண்டின் ஒட்டு மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், பாசுமதி அரிசி முதலிடத்தை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, சர்வதே சசந்தையில் கொத்தவரையின் விலை சரிவடைந்ததே முக்கிய காரணமாகும். இரண்டுஆண்டுகளுக்கு முன்பாக, ஒருகுவிண்டால், கொத்தவரையின் விலை, 1 லட்சம் ரூபாயாக இருந்தது. இது தற்போது, 85 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 15 ஆயிரம் ரூபாயாக சரிவடைந்துள்ளது.
அதேசமயம், இதே காலத்தில், சர்வ தேச சந்தையில், ஒரு குவிண்டால்,பாசுமதி அரிசியின் விலை, 50 சதவீதம் அதிகரித்து, 48,610 ரூபாயிலிருந்து, 73,150 ரூபாயாக உயர்ந்துள்ளது.வளர்ச்சிகடந்த 2011–12ம் நிதியாண்டுடன் முடிவடைந்த நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, ஒட்டு மொத்த அளவில் ஆண்டுக்கு சராசரியாக, 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, தரக்குறியீட்டு நிறுவனமான ‘கேர்’ தெரிவித்துள்ளது.
இதற்கு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஈராக், குவைத் ஆகிய நாடுகளில், இந்திய பாசுமதி அரிசிக்கான தேவை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டதே முக்கிய காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளதையடுத்து, நடப்பாண்டில், ஒரு கிலோ பாசுமதி அரிசியின் கொள்முதல் விலை, 59 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டில், 38 ரூபாயாக இருந்தது என, எம்.பி.ஜிண்டால் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|