பதிவு செய்த நாள்
05 டிச2013
02:43

பள்ளிபாளையம்: தொடர் மின் வெட்டு காரணமாக, தமிழகம் முழுவதும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான, ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி பாதிப்பை தடுக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், எட்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இங்கு, தினமும், 50 லட்சம் மீட்டர் அளவிற்கு, பல்வேறு துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.பின், இவை வெளியூர், வெளி மாநிலங்களுக்கு, விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, தமிழகம் முழுவதும் மின் வெட்டு உள்ள தால், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் உற்பத்தி, 40 சதவீதம் குறைந்துள்ளது. நுாலிழை விலையும், 10 சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால், விசைத்தறிதொழிலாளர்கள், வேலை இழந்துள்ளதுடன், கூலியும், குறைவாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜெனரேட்டரை பயன்படுத்தி, விசைத்தறியை இயக்கினாலும், உற்பத்தி செலவுக்கே, சரியாக உள்ளது.மின் வெட்டு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, நுாலிழை விலை உயர்வு போன்ற காரணங்களால், உற்பத்தியாளர்கள் விழிபிதுங்கி உள்ளனர். இக்காரணங்களால், மாநிலம் முழுவதும், நாள் ஒன்றுக்கு, 5 கோடி ரூபாய்க்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுஉள்ளது.
இதே நிலை நீடித்தால், நெசவுத்தொழில் மிகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது. விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக தென்னிந்திய துணைத் தலைவர் கருணாநிதி கூறியதாவது:மின் வெட்டு, நூலிழை விலை ஏற்றம், உற்பத்தி செய்த துணிகள் விற்பனையின்றி தேக்கம் ஆகியவற்றால், விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|