பதிவு செய்த நாள்
05 டிச2013
02:46

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்றும் மிகவும் மந்தமாகவே இருந்தது. அமெரிக்காவில், தனியார் துறையில் வேலைவாய்ப்பு உயரும் பட்சத்தில், அந்நாடு ஊக்குவிப்பு சலுகைதிட்டங்களை திரும்பப் பெறும் என்ற அச்சப்பாடு நிலவுகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகளில்வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், நுகர்வோர்பொருட்கள், பொறியியல் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், மின்சாரம், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின்குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 146.21 புள்ளிகள் சரிவடைந்து, 20,708.71 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிக பட்சமாக, 20,863.37 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,673.62 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஐ.டி.சி.,டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், விப்ரோ, பார்தி ஏர்டெல், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 40.90 புள்ளிகள் குறைந்து, 6,160.75 புள்ளிகளில் நிலைபெற்றது வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 6,209.15 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 6,149.90புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|