பதிவு செய்த நாள்
05 டிச2013
10:21

மும்பை : கடந்த இரு தினங்களாக சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் நான்காம் நாளான இன்று(டிச., 5ம் தேதி) அதிக ஏற்றத்துடன் துவங்கியது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 439.55 புள்ளிகள் அதிகரித்து 21 ஆயிரத்தை தாண்டி 21,148.26-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 121.90 புள்ளிகள் உயர்ந்து 6,282.82-ஆகவும் இருந்தது.
நேற்று நடந்த ஐந்து மாநில சட்டசபை சேர்தலில் தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பில், பா.ஜ. தான் வெற்றி பெறும் என தகவல் வெளியானது, அதனைத்தொடர்ந்து ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு, முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.35 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.40 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|