10 ஆண்டுகளில் முதன் முறையாக டீசலுக்கான தேவை குறைந்தது10 ஆண்டுகளில் முதன் முறையாக டீசலுக்கான தேவை குறைந்தது ... கடுங்குளிரால் முட்டைக்கு தேவை அதிகரிப்பு:10 நாட்களாக விலையில் மாற்றமில்லை கடுங்குளிரால் முட்டைக்கு தேவை அதிகரிப்பு:10 நாட்களாக விலையில் ... ...
மொபைல் போன் இணையதள பயன்பாடு 89 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2013
00:12

புதுடில்லி:நாட்டில்மொபைல்போன் வாயிலாக,இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.இது குறித்து, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு:
சந்தாதாரர்கள்:நடப்பு 2013–14ம் நிதிஆண்டின், முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), மொபைல்போன்,கணினி,டேப்லெட் உள்ளிட்டசாதனங்கள்வாயிலாக, இணையத்தை பயன்படுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 20.38 சதவீதம் அதிகரித்து,19.84 கோடியாக உயர்ந்துள்ளது.இது,இதற்கு முந்தைய, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில்,16.48 கோடியாக இருந்தது.இதே காலத்தில்,ஒட்டுமொத்தமாக, இணையத்தை பயன்படுத்துவோரில், மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை, 89 சதவீதம் உயர்ந்து, 17.65 கோடியாக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், மொபைல்போன் தவிர்த்து, இதர சாதனங்கள் வாயிலாக இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 1.3 சதவீதம் அதிகரித்து, 2.16 கோடியில் இருந்து, 2.18 கோடியாக உயர்ந்து உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த தொலை தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 90.30 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 87.33 கோடியாக உள்ளது.
பார்தி ஏர்டெல்:பார்தி ஏர்டெல் நிறுவனம், மொபைல் போனில் இணையத்தை பயன்படுத்தும் சந்தாதாரர்களை அதிக அளவில் கொண்டுள்ளது.ஒட்டுமொத்தமாக, மொபைல் போனில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில், பார்தி ஏர்டெல் நிறுவனம், 26.16 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தை வோடபோன் நிறுவனம் (23.34 சதவீதம்) பிடித்துள்ளது. அடுத்தஇடங்களில், ஐடியாசெலுலார்(18.94 சதவீதம்), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (16.25 சதவீதம்) ஆகியவைஉள்ளன. இப்பிரிவில், இதர தொலைதொடர்பு நிறுவனங்களின் பங்கு,ஒற்றை இலக்க அளவிற்கே உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், மொபைல் போன் நீங்கலாக, அகண்ட அலைவரிசை சந்தாதாரர் எண்ணிக்கை, 0.98 சதவீதம் உயர்ந்து, 1.52 கோடியாக உள்ளது.
இதில், வினாடிக்கு, 256 கிலோபைட்டிற்கும் குறைவாக, பதிவிறக்கம்வேகம் கொண்ட அகண்ட அலைவரிசை சந்தாதாரர் எண்ணிக்கை, 1.98 சதவீதம் அதிகரித்து, 66.90 லட்சமாக உயர்ந்து உள்ளது.
பீ.எஸ்.என்.எல்.,:கேபிள் மூலம் இணையத்தை பயன்படுத்தும் சந்தாதாரர் எண்ணிக்கையில், பொதுத்துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., நிறுவனம், 60.13 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 11.86 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது இடத்தில் உள்ளது.இதர நிறுவனங்களின் பங்களிப்பு, ஒற்றை இலக்க அளவிற்கே உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)