ரயில்வே கையாண்ட சரக்கு 67.76 கோடி டன்ரயில்வே கையாண்ட சரக்கு 67.76 கோடி டன் ... இயற்கை எரிவாயு விலை உயர்வால் உர நிறுவனங்களுக்கு ரூ.9,000 கோடி செலவு இயற்கை எரிவாயு விலை உயர்வால் உர நிறுவனங்களுக்கு ரூ.9,000 கோடி செலவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சூரியகாந்தி வரத்து அதிகரிப்பால் எண்ணெய் விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2013
00:27

தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, சூரியகாந்தி வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, எண்ணெய் விலை, லிட்டருக்கு, 5 ரூபாய் வரை சரிவடைந்து உள்ளது.
அறுவடை: சேலம், ஈரோடு மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில் ஆகிய இடங்களில்உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு, கர்நாடகாவின் தாவனிக்கரை, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சூரியகாந்தி விற்பனைக்கு வருவது வழக்கம்.சில மாதங்களாக, சூரிய காந்தியின் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. தற்போது, கர்நாடக மாநிலம் தாவனிக்கரையில், சூரியகாந்தி அறுவடை தீவிரமாக நடந்து வருவதால், அங்கிருந்து தமிழக ஆலைகளுக்கு, அதிகளவு சூரியகாந்தி விற்பனைக்கு வருகிறது.
இதே போல், ஆந்திராவில் இருந்தும் சூரியகாந்தியின் வரத்து அதிகரித்துள்ளதால், எண்ணெய் உற்பத்தியில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சந்தைக்கு வரும் எண்ணெயின் வரத்து அதிகரித்து உள்ளது.கடந்த நவம்பர் மாதம் முதல் வாரம், தீபாவளி பண்டிகைக்கு பின், சூரிய காந்தி எண்ணெய் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
அக்டோபர் இறுதியில், பிரபல எண்ணெய் நிறுவனங்களின் சூரியகாந்தி எண்ணெய், 1 லிட்டர், 92 ரூபாய்க்கும், உள்ளூர் தயாரிப்பு எண்ணெய், 1 லிட்டர், 88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 1 லிட்டருக்கு, 5 ரூபாய் குறைந்துள்ளது.
விற்பனை: பிரபல நிறுவனங்களின் எண்ணெய், 1 லிட்டர், 87 ரூபாய்க்கும், உள்ளூர் தயாரிப்பு எண்ணெய், 1 லிட்டர், 82 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பிரபல நிறுவனங்களின், 15லிட்டர் எண்ணெய் டின், 1,380 ரூபாய்க்கு விற்றது, 1,305 ரூபாய்க்கும், உள்ளூர் தயாரிப்பு எண்ணெய், 1,320 ரூபாய்க்கு விற்றது, 1,230 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
– நமது நிருபர் –

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)