பதிவு செய்த நாள்
14 டிச2013
01:17
மும்பை: வரத்து அதிகரிப்பால், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது.
லசல்கான் சந்தை:ஆசிய அளவில் மிகப் பெரிய சந்தையாக திகழும், லசல்கான் மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 15 ரூபாயாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், டில்லி உள்ளிட்ட ஒரு சில வடமாநிலங்களில், ஒரு கிலோ வெங்காயத்தின் சராசரி விலை, 40 ரூபாய் என்ற அளவில் உள்ளது.கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக, உள்நாட்டு சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 100 ரூபாயாக அதிகரித்திருந்தது.
இது, நாட்டின் பணவீக்க உயர்விற்கு வழிகோலியது.இதை, தடுத்து நிறுத்திடும் வகையில் மத்திய அரசு, ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 1,150 டாலராக அதிகரித்தது. இதன்படி, இந்த விலைக்கும் குறைவாக, ஏற்றுமதி செய்ய இயலாது.
தற்போது, உள்நாட்டு சந்தையில் ஒரு டன் வெங்காயத்தின் விலை, 350 டாலர் என்ற அளவில் உள்ளது. எனவே, மத்திய அரசு, விவசாயிகளின் நலன் கருதி, வெங்காய ஏற்றுமதியின் குறைந்தபட்ச ஏற்றுமதி
கையிருப்பு:பொதுவாக கரீப் பருவத்தில் விளையும் வெங்காயத்தை, அதிக நாட்களுக்கு கையிருப்பு வைக்க முடியாது என்பதால், சந்தைகளுக்கு அதிகளவில் வெங்காயம் வரத் துவங்கியுள்ளது.நாசிக் சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் என்ற அளவில் கோரப்படுகிறது. இது, விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, மத்திய மாநில அரசுகள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|