பதிவு செய்த நாள்
20 டிச2013
15:04
டாடா மோட்டார்ஸ் பிரீமியம் செடான் பிரிவு காரான டாடா மான்ஸாவை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்கால வாடிக்கையாளரின் தேவைக்கேற்றவாறு, வடிவமைக்கப்பட்ட டாடா மான்ஸா க்ளப் க்ளாஸ் செடான், கேபின் வசதி மற்றும் அதிநவீன ஸ்டைல் ஆகியவற்றில் மிகச் சிறந்ததாக உள்ளது. டச் ஸ்க்ரின் மல்ட்டி மீடியா இன்டர்பேஸ், ஜிபிஎஸ் மற்றும் ஆட்டோ மேடிக் கிளைமேடிக் கன்ட்ரோல் வசதிகள் இதில் உள்ளன. இந்த கார், 90 பிஎஸ் குவார்ட்ராஜென் டீசல் மற்றும் சபையர் பெட்ரோல் இன்ஜின்களால் சக்தி வா#ந்த முறையில் இயக்கப்படுகிறது.
குவாரட்ரஜெட் டீசல் ஒரு லிட்டருக்கு 21. 02கி.மீ., மைலேஜையும், சபையர் பெட்ரோல், ஒரு லிட்டருக்கு 13.7கி.மீ., மைலேஜ் அளிக்கும் எனவும் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு சிறப்பம்சங்களில் நன்கு மடக்கக்கூடிய ஸ்டீயரிங் வடிவமைப்பு, ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் முன்புற ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும். இன்ஜின் இயக்கம் குறிப்பிட்ட ஆர்பிஎம்-யை தாண்டும்போது டாக்கோ மீட்டரில் சாதாரணமாக காணப்படும் சிவப்புக் குறியீட்டுக்கு பதில், இண்டிகேட்டர் சிவப்பு நிறமாக மாறும் வண்ணம் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் இன்பின்டி ப்ளாக் (புதியது) டைரியன் லைன், லேசர்ரெட், காலிங்க்ரே, ட்யூ வொயிட் மற்றும் ஜெட் சில்வர் ஆகிய வியப்பூட்டும் நிறங்களிலும், எல்எஸ், எல்எக்ஸ், விஎக்ஸ், இஎக்ஸ் ஆகிய ரகங்களிலும் கிடைக்கின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|