பதிவு செய்த நாள்
28 டிச2013
02:20
மும்பை:அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று, 0.51 சதவீதம் அல்லது 31 காசுகள் அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, முந்தைய மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு, 36 காசுகள் சரிவடைந்து, 62.16ஆக வீழ்ச்சி கண்டிருந்தது.
இந்நிலையில், நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 20 காசுகள் உயர்ந்து, 61.97ஆக காணப்பட்டது.இது, வர்த்தகத்தின் இடையே, 61.80 – 62 என்ற அளவில், ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, 31 காசுகள் அதிகரித்து, 61.85ல் நிலை கொண்டது.
அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு உயர்ந்ததாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், உள்நாட்டில், பங்குச் சந்தை ஏற்றம் கண்டதாலும், டாலர் மதிப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.இருந்த போதிலும், நடப்பாண்டு ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 11.35 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|