தங்கம் விலை ரூ.32 குறைந்ததுதங்கம் விலை ரூ.32 குறைந்தது ... கடுமையான பனிப்பொழிவால்குண்டு மல்லி உற்பத்தி பாதிப்பு கடுமையான பனிப்பொழிவால்குண்டு மல்லி உற்பத்தி பாதிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
அமெரிக்காவிற்கான பொறியியல் ருட்கள்ஏற்றுமதி 390 கோடி டாலராக சரிவடைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2013
02:24

புதுடில்லி: நடப்பு 2013–14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 9.19 சதவீதம் சரிவடைந்து, 390 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
தேவை: இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 430 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது என, பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் தேவை குறைந்து போயுள்ளதை அடுத்து, பல்வேறு நாடுகளுக்கான நம்நாட்டின் பொறியியல் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.
அமெரிக்கா மட்டுமின்றி, ஜெர்மனிக்கான நம்நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியும், 6 சதவீதம் சரிவடைந்து,130 கோடிடாலராகவீழ்ச்சி கண்டுள்ளது.
ஒரு சில மேலைநாடுகளின் பொருளாதாரம் சுணக்க நிலையிலிருந்து, மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன.
இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதார மீட்சி குறித்து தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. இந்நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும், நாட்டின் ஒட்டு மொத்த பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 14 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது என, இ.இ.பி.சி., தலைவர் அனுபம் ஷா தெரிவித்தார்.
மதிப்பீட்டு காலத்தில் (ஏப்.,–நவ.,), ஒரு சில நாடுகளுக்கான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, அந்நாடுகளுடன், இந்தியா மேற்கொண்டுள்ள தாராள வர்த்தக ஒப்பந்தம் முக்கிய காரணம்.குறிப்பாக, கணக்கீட்டு காலத்தில், ஜப்பான் நாட்டிற்கான, இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 48.5 கோடி டாலரிலிருந்து, 56.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இதே போன்று, தென்கொரியாவிற்கான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியும், 13 சதவீதம் அதிகரித்து, 73.90 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மத்திய அரசு, வங்கதேசம், இலங்கை, மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடன் செய்து கொண்ட தாராள வர்த்தக உடன்படிக்கையால், அந்நாடுகளுக்கான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.
அண்டை நாடுகள்: மதிப்பீட்டு காலத்தில், இலங்கைக்கான இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 18.57 சதவீதம் வளர்ச்சி கண்டு, 113 கோடி டாலரிலிருந்து, 134 கோடி டாலராக அதிகரித்துஉள்ளது. மேலும், நேபாளத்திற்கான இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியும், 20.84 சதவீதம் உயர்ந்து, 57.70 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், தாராள வர்த்தக உடன்படிக்கை அமலில் உள்ள போதும், சிங்கபூருக்கான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 2.11 சதவீதம் சரிவடைந்து, 199 கோடி டாலராக குறைந்துள்ளது என, அனுபம் ஷா மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)