பதிவு செய்த நாள்
02 ஜன2014
13:41

புதுடில்லி: நடப்பு 2013 - 14ம் நிதியாண்டின், ஏப்., - நவ., வரையிலான எட்டு மாதங்களில், பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, 24.23 லட்சம் முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளனர். இதனால், 45 பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை, 4.04 கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 4.28 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்', 10.4 சதவீதம் (1,956 புள்ளிகள்) அதிகரித்தது சிறப்பம்சமாகும். இதன் காரணமாக, லாபநோக்கம் கருதி, ஏராளமான முதலீட்டாளர்கள், தங்களின் பரஸ்பர நிதி திட்ட கணக்குகளை முதிர்வு காலத்திற்கு முன்பே முடித்துக் கொண்டு உள்ளனர்.
மேலும், சில நிறுவனங்கள், அவற்றின் குறிப்பிட்ட பரஸ்பர நிதி திட்டங்களை மாற்றி வசதியாக அமைக்க அனுமதித்தன. இத்தகைய செயல்பாடுகளால், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும், முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்ற 2012 - 13ம் நிதியாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 36 லட்சம் முதலீட்டாளர்களை இழந்தன. இதற்கு முந்தைய மூன்று நிதிஆண்டுகளிலும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை, அவை இழந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|