பதிவு செய்த நாள்
21 ஜன2014
05:39

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், விப்ரோ நிறுவனத்தின், நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததையடுத்து, முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு, தேவை அதிகரித்தது.மேலும், அன்னிய நிதி நிறுவனங்கள், நேற்று நிகர அளவில், 385 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளில் முதலீடு மேற்கொண்டன. இதுவும், பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்த்தது.இருப்பினும், ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 141.43 புள்ளிகள் அதிகரித்து, 21,205.05 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,221.37 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 21,001.13 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 42.30 புள்ளிகள் உயர்ந்து, 6,303.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,307.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,243.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|