பதிவு செய்த நாள்
04 பிப்2014
23:47
பழநி:ஆந்திர தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ 1 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எதிர்பார்த்த விலை இல்லாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த 6 மாதத்திற்குமுன், வெங்காயத்திற்கு இணையாக ஒருகிலோ தக்காளி 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது, ஆந்திர தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மார்க்கெட்டில் ஒருபெட்டி(14 கிலோ) 14 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ஒருகிலோ 1 முதல் 3 ரூபாய் வரை ரகம், தரம் வாரியாக பிரித்து விற்கின்றனர்.
மேலும், அனைத்து பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் உள்ளதால், வெளிமாநிலம், வெளியூர்களுக்கு அனுப்பமுடியாத நிலை உள்ளது. உள்ளூரிலும் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர்.
வியாபாரி ராஜேந்திரன் கூறியதாவது: குறைந்தளவு தண்ணீர் தேவை என்பதால், ஏராளமான விவசாயிகள், தக்காளி பயிரிட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 3500 பெட்டிகள் விற்பனைக்கு வருகிறது. ஆந்திர மாநில வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விளைச்சலுக்காக, செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது, என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|