பதிவு செய்த நாள்
04 பிப்2014
23:48

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 62.58 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 4 காசுகள் அதிகரித்து, 62.54ல் நிலைகொண்டது.
அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.81ஆக இருந்தது. இது, ஒரு கட்டத்தில், 62.50 வரை சென்றது.அமெரிக்காவில் உற்பத்தி துறையின் வளர்ச்சி, எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற தகவல் வெளியானது. இதை அடுத்து, சர்வதேச கரன்சிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்தது.
குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு, டாலருக்கு நிகரான, ஜப்பானின் யென் மதிப்பு உயர்ந்தது. இது போன்ற காரணங்களால், நேற்று ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மாலையில், டாலருக்கான தேவை குறைந்ததை அடுத்து, ரூபாய் மதிப்பு அதிகரித்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|