பதிவு செய்த நாள்
08 பிப்2014
14:02
வாகனத்தை பின்னோக்கி எடுக்கும் போது, விபத்து ஏற்படுவதை நிறைய கேள்விப்படுகிறோம். குறிப்பாக, குழந்தைகள் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தால், ஓட்டுனர் இருக்கையிலிருந்து பார்க்கமுடியாமல், உயிர் சேதம் ஏற்படுவதும் உண்டு. இதற்கு காரணம், காரை பின்னோக்கி செலுத்தும் போது, தோன்றும் ப்ளைன்ட் ஸ்பாட் எனப்படுவதாகும். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருப்பதை, ரியர் வ்யூ கண்ணாடிகளில் பார்க்க முடியாது. இம்மாதிரி சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு கருவியாக விளங்குவது தான், பேக்அப் பார்க்கிங் கேமரா.
இந்த கேமரா காரின் பின்புறம் இருப்பதை துல்லியமாக தொடர்ந்து டேஷ் போர்ட்டில் காட்டிக் கொண்டே இருக்கும். காரின் பின்புறம் இருப்பவர்களையோ, மற்ற வாகனங்களையோ இடிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், எதையும் இடிக்காமல் நேர் வரிசையில் பார்க் செய்யவும் இது உதவி செய்கிறது. கச்சிதமாக, தேவையான இடத்தில் சுலபமாக இக்கேமரா உதவியுடன் பார்க் செய்து விடலாம். இன்றைய பல கார்களில் இக்கருவி பொருத்தப்பட்டிருந்தாலும், இதை நாம் வெளியில் வாங்கியும் பொருத்திக் கொள்ளலாம். வயர் கொண்டதாகவும், வயர்லெஸ்ஸாகவும், இக்கேமராக்கள் சந்தையில் கிடைக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|