பதிவு செய்த நாள்
24 பிப்2014
14:38

இணையதளத்துடன் இணைந்து, மோட்டாரோலா நிறுவனம் தன், புதிய ஸ்மார்ட் போன் மோட்டோ ஜி (Moto G) மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் குறித்த அறிமுக அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியானது. இதில் 4.5 அங்குல அளவிலான திரை, 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் தரப் பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.3 ஆக உள்ளது. இதனை கிட்கேட் 4.4.க்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். இதில் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 1.3 எம்.பி.திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளது.
இதன் இன்னொரு சிறப்பு இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயக்கம் தரப்படுவதாகும். போன் வெளியேயும் உட்புறமாகவும், நீர் பாதிக்காத வகையில் பூச்சு தரப்பட்டுள்ளது. இதன் எடை 146 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. வீடியோ பதிவு இயக்க வசதி கிடைக்கிறது. இதன் ராம் நினைவகம் 1 ஜிபி ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 8 மற்றும் 16 ஜிபி என இரு மாடல்களாகவும் கிடைக்கின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். மற்றும் GLONASS ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2,070 mAh திறன் கொண்டதாக உள்ளது.
கறுப்பு வண்ணத்தில், பின்புற ஷீல்ட் மாற்றும் வகையில் இந்த போன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. 8 ஜிபி மாடல் ரூ.12, 499, 16 ஜிபி மாடல் ரூ.13, 999 என விலையிடப்பட்டுள்ளன. ப்ளிப் கார்ட் இணைய தளமும் சில சலுகைகளை, இந்த போன்களை வாங்கு வோருக்கு அளிக்கிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|