பதிவு செய்த நாள்
27 பிப்2014
14:10
இந்தியாவில், வாகன சேவையில் முன்னணி நிறுவனமான டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த "தி வாரண்டி குரூப்' நிறுவனத்துடன் இணைந்து கார், டிரக், டிராக்டர், இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் என, அனைத்து தரப்பு ஆட்டோமொபைல் வாகனங்களுக்கும் முழுமையான வாரண்டி சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையை பயன்படுத்தி, முதல் ஆண்டில், 50,000 வாகனங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில், 10 லட்சம் வாகனங்களுக்கும் வாரண்டி சேவை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், தன் புகழ்பெற்ற மைடிவிஎஸ் பிராண்ட் மூலம் தன் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவை மூலம், ஏற்கனவே வாரண்டி சேவையையும், இந்நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து, இந்திய வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள மைடிவிஎஸ், ஏற்கனவே சென்ற ஆண்டு, "மையர்ஸ் டயர் சப்பை' எனும் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|