பதிவு செய்த நாள்
02 ஏப்2014
15:17

சென்னை: தமிழகத்தில் பருப்பு வகைகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. பாசிப்பருப்பு ஒரு கிலோ, 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. தமிழத்தில், கடந்த வாரத்தில், 9,500 ரூபாய்க்கு கிடைத்த, 100 கிலோ கொண்ட பாசிப்பருப்பு மூட்டை, 500 ரூபாய் உயர்ந்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. 7,000 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை துவரம்பருப்பு (100 கிலோ), 7,300 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுபோன்று, 7,200 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை உளுந்தம்பருப்பு, 7,400 ரூபாயாகவும், பர்மா உளுந்து, 6,200 ரூபாயிலிருந்து, 6,400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. சில்லரை விலையில், 96 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பாசிப்பருப்பு, 100 - 102 ரூபாய்; 70 ரூபாய்க்கு கிடைத்த துவரம்பருப்பு, 75 ரூபாய்; 60 ரூபாய்க்கு கிடைத்த, இரண்டாம் ரக துவரம்பருப்பு, 65 ரூபாய்; 74 ரூபாயக்கு விற்ற ஒரு கிலோ உளுந்தம் பருப்பு, 76 ரூபாய்; 64 ரூபாய்க்கு கிடைத்த பர்மா உளுந்து, 66 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நாட்டின் பருப்பு தேவையில், 70 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். பர்மாவில், தண்ணீர் திருவிழா நடக்கிறது. இதனால் அங்கிருந்து இறக்குமதி சற்று குறைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன், அறுவடை காலத்தில், உள்ளூர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாசிப்பருப்பு ஒரு கிலோ, 100 ரூபாயையும் தாண்டிவிட்டது. விலை குறைய, ஒரு மாதம் வரை ஆகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில், பெரிய அளவில் அதிகாரிகளின் நெருக்கடி இருக்காது என்பதால், பெரிய நிறுவனங்கள் பருப்பு வகைகளை வாங்கி பதுக்கி வைத்துள்ளதும் விலையேற்றத்துக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|