பதிவு செய்த நாள்
29 ஏப்2014
15:43

வறட்சி காரணமாக, முன்பருவ ரகங்களான செந்தூரா, இமாம் பசந்த் மாம்பழங்களின் உற்பத்தி குறைந்ததால், வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில், மாம்பழம் உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில், மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, சீரான மழை இல்லாததால், வறட்சி ஏற்பட்டு, மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, ஏப்ரல் துவக்கத்தில், முன்பருவ ரக மாம்பழம் விற்பனைக்கு வந்துவிடும். தற்போது, சொட்டு நீர் பாசனம் மூலம் விளைந்த, முன்பருவ ரகமான செந்தூரா, இமாம் பசந்த் ஆகிய மாம்பழங்கள், விற்பனைக்கு வந்துள்ளன.
கடந்த ஆண்டு, செந்தூரா ஒரு கிலோ, 30 ரூபாய்க்கும், இமாம் பசந்த் 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால், வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோ செந்தூரா, 50 ரூபாய்க்கும்; இமாம்பசந்த், 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கிருஷ்ணகிரியில், இந்த ஆண்டு, வழக்கத்தை விட, 25 சதவீதம் மட்டுமே, மா சாகுபடியாகும் என்ற நிலையில், மாம்பழம் விலை மேலும் உயரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|