பதிவு செய்த நாள்
29 ஏப்2014
23:58

கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், நடப்பு 2014ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் விலையில் மருந்துகளை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது, 1,018 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்குகள்:அந்நிறுவனங்களிடம் இருந்து, கூடுதல் விலை மற்றும் வட்டி உட்பட, 3,382 கோடி ரூபாய் அபராதம் விதக்கப்பட்டுள்ளது. இதில், 274 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பல மருந்து நிறுவனங்கள் மீதான வழக்குகள், நீதிமன்றங்களில் உள்ளதால், எஞ்சிய தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது.மத்திய அரசு, அனைத்து தரப்பினருக்கும் குறைந்த விலையில், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கும் நோக்கில், கடந்த, 1997ம் ஆண்டு, தேசிய மருந்து விலை ஆணையம் (என்.பி.பி.ஏ.,) என்ற அமைப்பை ஏற்படுத்தியது.
இந்த அமைப்பு, பல்வேறு மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்து வருகிறது.நிர்ணயிக்கப்பட்டதை விட, அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது, என்.பி.பி.ஏ., அபராதம் விதிப்பது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மருந்துகளின் மொத்த விற்பனை விலை குறியீட்டின் அடிப்படையில், ஆண்டுக்கு ஒரு முறை மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விதிமுறைகள்:எனினும், இந்த விலை உயர்வுக்கும், என்.பி.பி.ஏ.,–ன் அனுமதி தேவை. ஆனால், பல மருந்து நிறுவனங்கள், இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல், தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்கின்றன.இதன்படி, கடந்த 2013–14ம் நிதியாண்டில், 89 மருந்து நிறுவனங்கள் மீது, நிர்ணயிக்கப்பட்டதை விட, அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்ததாக, என்.பி.பி.ஏ., குற்றம்சாட்டி, 384 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து பல நிறுவனங்கள், நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளன. இதனால், சென்ற நிதியாண்டில், அபராத தொகையில், 40 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது.அண்மையில், பிரபல மருந்து நிறுவனமான சிப்லா, அதன் 'சிப்ரோ' ஊசி மருந்து மற்றும் 'சிப்லாக்ஸ்' மருந்துகளை, நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் விலையில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, ‘சிப்ரோ' ஊசி மருந்திற்கு, 24 கோடி ரூபாயும், 'சிப்லாக்ஸ்' மருந்துகளுக்கு, 81 கோடி ரூபாயும், ஆக, 105 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, சிப்லா நிறுவனத்திற்கு, என்.பி.பி.ஏ., நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.
தொற்று நோய்:கடந்த ஜனவரியில், இதே நிறுவனத்திற்கு,வேறு சில மருந்துகளை கூடுதல் விலையில் விற்பனை செய்ததற்காக, 1,700 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பாக்டீரியாக்களால் உண்டாகும் தொற்று நோய்களுக்கு 'சிப்லாக்ஸ்' மருந்தும், சிறுநீரக தொற்றுநோய்களுக்கு 'சிப்ரோபிளாக்சின்' மருந்தும் பயன்படுத்தப்படுகிறது.
–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|