பொரு­ளா­தார வளர்ச்சி 6 சத­வீ­த­மாக உயரும்’பொரு­ளா­தார வளர்ச்சி 6 சத­வீ­த­மாக உயரும்’ ... ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.20 ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.20 ...
ஈரானின் கடும் நிபந்தனைகளால்...பாசு­மதி அரிசி ஏற்­று­ம­தியில் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2014
01:43

மும்பை:இந்­திய பாசு­மதி அரிசி இறக்­கு­ம­திக்கு, ஈரான் கடு­மை­யான நிபந்­த­னை­களை விதித்­துள்­ளது. இதனால், ஈரா­னுக்­கான இந்­தி­யாவின் பாசு­மதி அரிசி ஏற்­று­மதி சரி­வ­டைந்­துள்­ளது.
இந்­தி­யாவின் மொத்த அரிசி ஏற்­று­ம­தி யில், பாசு­மதி அரி­சியின் பங்­க­ளிப்பு, 70 சத­வீ­த­மாக உள்­ளது. கடந்த, 2013–14ம் நிதி­யாண்டில், இந்­தியா, 28,189 கோடி ரூபாய் மதிப்­பி­லான, 40 லட்சம் டன் பாசு­மதி அரி­சியை ஏற்­று­மதி செய்­து உள்ளது.இதில், ஈரான் நாட்­டிற்கு மட்டும், 11,488 கோடி ரூபாய் மதிப்பில், 15 லட்சம் டன் பாசு­மதி அரிசி ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.
பங்களிப்பு:இவ்­வ­கையில், சென்ற நிதி­யாண்டில், இந்­தி­யாவின் பாசு­மதி அரிசி ஏற்­று­ம­தி யில், ஈரான், 40 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டி­ருந்­தது.ஆனால், நடப்பு 2014–15ம் நிதி­யாண்டில், இந்த பங்­க­ளிப்பு வெகு­வாக குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதற்கு, இந்­திய பாசு­மதி அரிசி இறக்­கு­ம­திக்கு, ஈரான் விதித்­துள்ள பல்­வேறு நிபந்­த­னைகள் தான் காரணம் என,ஏற்­று­ம­தி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.
குறிப்­பாக, மர­பணு மாற்ற தொழில்­நுட்­பத்தில் இந்­திய பாசு­மதி அரிசி விளைக்­கப­டு­வ­தில்லை என்ற சான்றை ஈரான் கோரி­யுள்­ளது.இத்­துடன், இந்­திய வேளாண் வழி­மு­றை­களின் சிறப்பு குறித்தும், உணவு பாது­காப்பு மற்றும் ‘பேக்­கேஜிங்’ தொடர்­பான ‘ஐ.எஸ்.ஓ 22000’ சான்­று­க­ளையும், பாசு­மதி அரிசி ஏற்­று­ம­தி­யா­ளர்கள் அளிக்க வேண்டும் என, ஈரான் தெரி­வித்­துள்­ளது.இவற்­றுக்­கெல்லாம் மேலாக, இந்­திய பாசு­மதி அரி­சியில், நிர்­ண­யிக்­கப்­பட்ட ரசா­யனக் கலப்பின் அள­வையும், 22 சத­வீதம் குறைத்து விட்­டது. பாசு­மதி அரிசி மூட்டை
ஒவ்­வொன்­றிலும், இந்த விவ­ரங்­க­ளுடன் கூடிய அட்டை இணைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் எனவும் ஈரான் உத்­த­ர­விட்­டுள்­ளது.
விழிப்­பு­ணர்வு:மேற்­கண்ட நிபந்­த­னைகள், நடப்­பாண்டு ஜன­வரி முதல் அம­லுக்கு வந்­துள்­ளது. இதை­ய­டுத்து, ஈரான் நாட்­டுக்­கான, இந்­தி­யாவின் பாசு­மதி அரிசி ஏற்­று­மதி சரியத் துவங்­கி­யுள்­ளது.கடந்த ஆண்டு டிசம்­பரில், இந்­தி­யாவில் இருந்து, 1.70 லட்சம் டன் பாசு­மதி அரிசி ஏற்­று­மதி செய்­யப்­பட்­டது. இது, நடப்­பாண்டு ஜன­வ­ரியில், 1.30 லட்சம் டன்­னா­கவும், பிப்­ர­வ­ரியில், 89,387 டன்­னா­கவும் குறைந்­துள்­ளது. இது, மார்ச் மாதம் மேலும் குறைந்து, 55,210 டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது.
இது­கு­றித்து இந்­திய அரிசி ஏற்­று­ம­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பின் முன்னாள் தவைலர் விஜய் சேத்­தியா கூறி­ய­தா­வது:பாசு­மதி அரி­சியில் உள்ள ரசா­யனக் கலப்பை குறைப்­பது குறித்து, விவ­சா­யி­க­ளிடம் விழிப்­பு­ணர்வு பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. சிறப்­பான தரக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை பின்­பற்­று­மாறு ஏற்­று­ம­தி­யா­ளர்கள் அறிவு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.
இத­னி­டையே, இந்­தி­யாவில் பாசு­மதி அரிசி சாகு­படி செய்யும் முறை, பதப்­ப­டுத்தும் வச­திகள் உள்­ளிட்­ட­வற்றை நேரில் வந்து ஆய்வு செய்­யு­மாறு, ஈரான் அரசை, மத்­திய வர்த்­தக அமைச்­சகம் கேட்டுக் கொண்­டுள்­ள­தாக கூறப்­படுகி­றது.
சவுதி அரே­பியா:இது­கு­றித்து அரசு அதி­காரி ஒருவர் கூறு­கையில், “ஈரான் விதித்­துள்ள நிபந்­த­னை­க­ளின்­படி, இந்­தியா பாசு­மதி அரி­சியை ஏற்­று­மதி செய்ய தயா­ராக உள்­ளது; ஆனால், பல்­வேறு அமைப்­பு­க­ளிடம் தரச் சான்­று­களை பெற வேண்­டி­ யுள்­ளதால், ஏற்­று­ம­தியில் தாமதம் ஏற்பட்­டுள்­ளது,” என்றார்.ஈரா­னுக்கு அடுத்­த­ப­டி­யாக, சவுதி அரே­பியா, ஐக்­கிய அரபு எமிரேட், குவைத் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு, இந்­திய பாசு­மதி அரிசி அதிக அளவில் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)