பதிவு செய்த நாள்
11 மே2014
04:41
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 176 ரூபாய் குறைந்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,803 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 29,980 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, இரண்டு ரூபாய் குறைந்து, 2,801 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 16 ரூபாய் சரிவடைந்து, 22,408 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 20 ரூபாய் குறைந்து, 29,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 44.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,510 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த திங்களன்று (5ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,823 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆக, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 22 ரூபாயும், சவரனுக்கு, 176 ரூபாயும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|