ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற, இறக்கம்ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற, இறக்கம் ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.80 குறைவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.80 குறைவு ...
பாட்டில் குடிநீர் சந்தை மதிப்புரூ.16 ஆயிரம் கோடி­யாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2014
01:39

புது­டில்லி:இந்­தி­யாவில், பாட்­டில்­களில் அடைக்­கப்­பட்ட குடிநீர் விற்­பனை சிறப்­பான அளவில் வளர்ச்சி கண்டு வரு­கி­றது.வரும் 2018ம் ஆண்டில், பாட்டில்­களில் அடைக்­கப்­பட்ட குடிநீர் சந்தை மதிப்பு, பன் மடங்கு அதிகரித்து, 16 ஆயிரம் கோடி ரூபாயாக வளர்ச்சி காணும் என, ஆய்வு நிறுவ­னத்தின் புள்­ளி­விவரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.சுற்­றுலா பய­ணிகள்:கடந்த 2013ம் ஆண்டு நில­வ­ரப்­படி, உள்­நாட்டில், பாட்­டில்­களில் அடைக்­கப்­பட்ட குடி­நீ­ருக்­கான சந்தை மதிப்பு, 6,௦௦௦ கோடி ரூபாயாக இருந்­தது.இத்­துறை ஒட்டு மொத்த அளவில் ஆண்­டுக்கு, 22 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருவ­தாக, மதிப்­பீட்டில் தெரிவிக்கப்­பட்­டுள்­ளது.
தற்­போது, சுத்­த­மான குடி­நீரை அருந்­த­வேண்டும் என்ற விழிப்­புணர்வு ஏற்­பட்­டுள்­ளது. இதை­அ­டுத்து, பாட்டில் குடி­நீ­ருக்­கான தனிநபர் நுகர்வு மேம்­பட்டு வரு­கி­றது.குறிப்­பாக, உள்­நாடு மற்றும் வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் அதி­க­ளவில், பாட்­டில்­களில் அடைக்­கப்­பட்ட குடி­நீரை வாங்கி வரு­கின்­றனர்.
உற்பத்தி:பெரிய நிறு­வ­னங்கள் மட்­டு­மின்றி, மண்­டல அளவில் செயல்­பட்டு வரும் சிறிய நிறு­வ­னங்­களும், பாட்டில் குடிநீர் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் சிறந்து விளங்கி வருகின்­றன.உள்­நாட்டில், பிஸ்­லரி, பெப்சிகோ, கோக­கோலா, பார்லே, தாரிவால் உள்­ளிட்ட பெரிய பிராண்டுகள், இச்சந்தையில், 67 சதவீத பங்­க­ளிப்பை கொண்டுள்ளன. மீத­முள்ள சந்தை பங்­க­ளிப்பை, மண்­டல அளவில் செயல்­படும் அமைப்பு சாராத சிறிய நிறு­வ­னங்கள் பெற்­றுள்­ளன.போது­மான அள­விற்கு அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள் இல்லா­ததால், நக­ரங்கள் மற்றும் சிறிய நக­ரங்­களில் அமைப்பு சார்ந்த நிறு­வ­னங்­களால், பாட்­டில்­களில் அடைக்­கப்­பட்ட குடிநீர் விற்­ப­னையை மேற்­கொள்ள முடி­ய­வில்லை.
சுப­கா­ரி­யங்கள்:இது போன்ற இடங்­களில், அமைப்பு சாராத நிறு­வ­னங்கள் அதிக பங்­க­ளிப்பை கொண்டுள்ளன.பாது­காக்­கப்­பட்ட குடிநீர் விற்பனைக்கு, தேவை அதி­கரித்து வரு­வதால், பல பெரிய நிறு­வனங்கள், சிறிய பாக்­கெட்­டு­களில் தண்­ணீரை விற்­பனை செய்து வருகின்­றன.தனி­ந­பர்கள் மட்­டு­மின்றி, திருமண நிகழ்ச்­சிகள், சுப­கா­ரி­யங்கள், சமூக மற்றும் நிறு­வ­னங்­களின் முக்­கிய நிகழ்ச்­சி­க­ளிலும், பாட்டில்­களில் அடைக்­கப்­பட்ட குடிநீர் வினி­யோகம் அதி­க­ரித்து வருவ­தாக ஆய்­வ­றிக்­கையில் மேலும் தெரிவிக்கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)