பதிவு செய்த நாள்
13 மே2014
01:45
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதம், தங்கம் இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், 74 சதவீதம் குறைந்து, 175 கோடி டாலராக (10,500 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், இந்தியா, 678 கோடி டாலர் (40,680 கோடி ரூபாய்) மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.நடப்பாண்டு மார்ச் மாதம், நாட்டின் தங்கம் இறக்குமதி, 17.27 சதவீதம் குறைந்து, 275 டாலராக (16,500 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 333 கோடி டாலராக (19,980 கோடி ரூபாய்) இருந்தது.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் விளைவாக, தங்கம் இறக்குமதியும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|