நாட்டின் பண­வீக்கம் 8.59 சத­வீ­த­மாக அதி­க­ரிப்புநாட்டின் பண­வீக்கம் 8.59 சத­வீ­த­மாக அதி­க­ரிப்பு ... இந்திய நாணய மாற்று சந்தைக்கு விடுமுறை இந்திய நாணய மாற்று சந்தைக்கு விடுமுறை ...
வரத்து குறைவால் வெங்­காயம் விலை கிடு கிடு...தட்­டுப்­பாட்­டிற்கு யார் காரணம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2014
00:57

சந்­தை­களில் வெங்­காயம் வரத்து குறைந்­துள்­ளதால், அதன் விலை மீண்டும் கிடு கிடு­வென உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்­களில், வெங்­காயம் விலை, சராசரியாக, 31 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது.
மகா­ராஷ்­டி­ரா:சென்­னையில், மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் (100 கிலோ) வெங்­காயம் விலை, 1,500 ரூபாயில் இருந்து, 1,800 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.அதி­க­பட்­ச­மாக, மகா­ராஷ்­டி­ராவின் பிம்­பல்கான் சந்­தையில், ஒரு குவிண்டால் வெங்­காயம் விலை, 31 சத­வீதம் அதி­க­ரித்து, 800 ரூபாயில் இருந்து, 1,050 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
இதே போன்று, டில்லி, ஜோத்பூர், மன்மட், லசன்கான், சூரத் சந்­தை­க­ளிலும், வெங்காயம் விலை, திடீரென அதி­க­ரித்­துள்­ளது. டில்லி சந்தையில், வெங்­காயம் வரத்து, 81 சத­வீதம் குறைந்து, 12,090 குவிண்­டாலில் இருந்து, 2,201 குவிண்­டா­லாக வீழ்ச்சி கண்டுள்ளது. அது போன்று, மன்மட் சந்­தையில், வெங்­காயம் வரத்து, 6,500லிருந்து, 5,300 குவிண்­டா­லாக சரிவடைந்­துள்­ளது.
பருவம் தவ­றிய மழை:கடந்த 2012–13 மற்றும் 2011–12ம் நிதி­யாண்­டு­களில், வெங்­காயம் உற்­பத்தி, முறையே, 1.75 கோடி டன் மற்றும் 1.68 கோடி டன் என்ற அள­விற்கு இருந்­தது. இது, சென்ற 2013–14ம் நிதி­ஆண்டில், 1.90 கோடி டன்னாக உயரும் என, மதிப்­பிடப்­பட்­டது.இந்­ லையில், நடப்­பாண்டு, மார்ச் – ஏப்ரல் மாதங்­களில், பருவம் தவ­றி பெய்த மழை, ஆலங்கட்டி மழை போன்ற இயற்கை இடர்­பா­டு­களால், ஒரு சில வட மாநி­லங்­களில் வெங்­காயம் உற்பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
இதனால், மதிப்­பீட்டை விட, வெங்­காயம் உற்­பத்தி 15–20 சத­வீதம் குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இதனிடையே, உணவு தயா­ரிப்பு உள்­ளிட்ட துறை­களை சேர்ந்த பல்­வேறு நிறு­வ­னங்கள், எதிர்­கால தேவை மற்றும் விலை­யேற்­றத்தை கருத்தில் கொண்டு, மொத்­த­மாக வெங்­கா­யத்தை வாங்கி இருப்பில் வைக்கத் துவங்­கி­யுள்­ளன.
இத்­துடன், மொத்த விற்பனை­யா­ளர்­களும், நீண்ட காலம் வெங்­கா­யத்தை சேமித்து வைக்கும் வசதி கொண்ட பெரிய விவ­சா­யி­களும், சிறிய விவ­சா­யி­களை நேரடியாக அணுகி, வெங்காயத்தை கொள்முதல் செய்து வருகின்றனர்.சந்­தையில் வரத்து குறையும் போது, அதிக விலைக்கு வெங்­கா­யத்தை விற்று கொள்ளை லாபம் பார்ப்­பது தான் இவர்­களின் நோக்கம்.இதனால், சிறிய விவ­சா­யி­களிடம் இருந்து சந்­தை­களுக்கு வெங்­காயம் வரு­வது குறைந்துள்­ளது.
ஆச்சரியமில்லை:நாடு முழு­வதும், தற்­போது வெங்­காயம் அறு­வடை காலம் முடி­வ­டைய உள்­ளதால், விரைவில் அதன் உற்­பத்தி குறித்த இறுதி விவரம் தெரிய­வரும். ‘‘உற்­பத்தி குறையும் பட்­சத்தில், வெங்­காயம் விலை கடந்த ஆண்டை போல் உச்சத்­திற்கு சென்­றாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை,’’ என, பிம்­பல்கான், வேளாண் உற்­பத்தி சந்­தைப்­படுத்தும் அமைப்பின் இயக்குனர் அதுல் ஷா தெரி­வித்தார்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)