உலகின் மொத்த ஏற்­று­ம­தியில் இந்­தியா 4  சத­வீ­தத்தை எட்டும்உலகின் மொத்த ஏற்­று­ம­தியில் இந்­தியா 4 சத­வீ­தத்தை எட்டும் ... கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.21,232 கோடி கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.21,232 கோடி ...
சூரிய மின்­கலம் இறக்­கு­ம­திக்கு பொருள் குவிப்பு வரி:உள்­நாட்டு நிறு­வ­னங்­க­ளின் பிரச்னைக்கு தீர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2014
01:16

புது­டில்லி:மலிவு விலையில் இறக்­கு­ம­தி­யாகும் சூரிய மின் கலங்கள் இறக்­கு­ம­திக்கு, மத்­திய வர்த்­தக அமைச்­சகம், பொருள் குவிப்பு வரி விதித்­துள்­ளது. மத்­திய அரசு, இது குறித்த அர­சா­ணையை வெளி­யிட்ட உடன், புதிய வரி விகிதம் அம­லுக்கு வரும்.மலிவு விலையில் இறக்­கு­ம­தி­யாகும் பொருட்­களால்,உள்­நாட்டு நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுக்க, பொருள் குவிப்பு வரி விதிக்­கப்­ப­டு­கி­றது.
மலிவு விலை:அமெ­ரிக்கா, சீனா, மலே­சியா, தைவான் ஆகிய நாடுகள், சூரிய ஒளியில் மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்யும் மின்க­லங்கள், மின் தக­டுகள் உள்­ளிட்­ட­வற்றை மலிவு விலையில், இந்­தி­யா­விற்கு ஏற்­றுமதி செய்து வரு­கின்­றன.
இந்­தி­யாவில், 70 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான சூரிய மின்­சக்தி திட்­டங்­களில், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட, குறிப்­பாக, சீனாவின் மலிவு விலை சாத­னங்கள் தான் பொருத்­தப்­பட்­டு உள்­ளன.இதனால், சூரிய மின் உற்­பத்தி சார்ந்த சாத­னங்­களை தயா­ரித்து வரும் உள்­நாட்டு நிறு­வ­னங்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தி­யாவின், சூரிய சக்தி வாயி­லான மின் உற்­பத்தி திறன், தற்­போது, 1,700 மெகாவாட் என்ற அள­விற்கு உள்­ளது. இதை, வரும், 2022ம் ஆண்டு, 20 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
கடும் போட்டி:அண்­மையில்,தேசிய சூரி­ய ­சக்தி திட்­டத்தின் கீழ், 375 மெகாவாட் உட்­பட, 4,000 மெகாவாட் சூரிய மின்உற்­பத்­திக்­கான ஒப்­பந்த புள்­ளிகள் கோரப்­பட்­டுள்­ளன.இது போன்ற திட்­டங்கள்,சூரிய மின் சாதன தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு வள­மான வர்த்­தக வாய்ப்பை வழங்கி வரு­கின்­றன.ஆனால், சர்­வ­தேச நாடு­களின் போட்­டியால், அத்­த­கைய வாய்ப்பை, முழு­மை­யாக பயன்­ப­டுத்திக் கொள்ள முடி­யாமல், உள்­நாட்டு நிறு­வ­னங்கள் தவிக்­கின்­றன.
இதை­ய­டுத்து, சூரிய மின்­சக்தி சாத­னங்­களின் இறக்­கு­ம­திக்கு, பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என, இந்­நி­று­வ­னங்கள், கடந்த 2012ம் ஆண்டு முதல் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.இவ்­வி­வ­காரம் தொடர்­பாக, பொருள் குவிப்பு தடுப்பு தலைமை இயக்­கு­ன­ரகம் (டீ.ஜி.ஏ.டீ.,) கடந்த இரண்டு ஆண்­டுக­ளாக ஆய்வு செய்து வந்­தது. அதில், மலி­வான சூரிய மின்­க­லங்­களின் இறக்­கும­தியால், உள்­நாட்டு நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­ப­டு­வது உறு­தி­யா­னது.இதைத் தொடர்ந்து, அமெ­ரிக்­காவில் இருந்து இறக்­கும­தி­யாகும், ஒரு வாட் சூரிய மின்­க­லத்­திற்கு, 48 சென்ட் (100 சென்ட்– 1 டாலர்) பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்­திற்கு பரிந்­து­ரைத்­துள்­ளது.
வித்தியாசம்:அது போன்று, சீனா, மலே­சியா, தைவான் நாடு­களின், ஒரு வாட் சூரிய மின்க­லத்­திற்கு, முறையே, 81 சென்ட், 62 சென்ட், 59 சென்ட் என்ற விகி­தத்தில், பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என, வலி­யுறுத் ­தப்­பட்­டுள்­ளது.புதிய வரி அம­லுக்கு வரும்­பட்­சத்தில், சூரிய மின்­க­லங்கள், பட்­டிகள் உள்­ளிட்ட சாத­னங்­க­ளுக்­காக, கூடு­த­லாக 5 – 110 சத­வீதம் வரி செலுத்த நேரிடும்.இதனால், இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கும், உள்­நாட்டு தயா­ரிப்­பு­களும் இடை­யி­லான விலை வித்­தி­யாசம் குறையும். இதன் மூலம், உள்­நாட்டு தயா­ரிப்­பு­க­ளுக்கு தேவை பெருகும்.அமெ­ரிக்கா மிரட்டல்:பொருள் குவிப்பு வரி தொடர்­பான இந்­தி­யாவின் நிலைப்­பாட்டை, கூர்ந்து கவ­னித்து வரு­வ­தா­கவும், இது குறித்து, உலக வர்த்­தக அமைப்­பிடம் முறை­யி­டுவோம் என்றும், அமெ­ரிக்க வர்த்­தக பிர­தி­நி­திகள் குழு தெரி­வித்­துள்­ளது. இதனிடையே, ஏற்கனவே அளித்த புகாரின்பேரில் இந்தியா – அமெரிக்கா இடையிலான சூரிய சக்தி சாதனங்கள் பிரச்னை குறித்து விசாரிக்க, குறைதீர்ப்பு குழு ஒன்றை, உலக வர்த்தக அமைப்பு நியமித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)