ஒரு வாரத்தில் தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.536 குறைந்­ததுஒரு வாரத்தில் தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.536 குறைந்­தது ... ஏர் – ­ஏ­ஷியா விமான சேவையை துவக்குவதில் திடீர் சிக்கல்:சட்ட விரோதமாக அனுமதி பெற்றதாக குற்றச்சாட்டு ஏர் – ­ஏ­ஷியா விமான சேவையை துவக்குவதில் திடீர் சிக்கல்:சட்ட விரோதமாக ... ...
மொபைல் எண் மாறாமல் சேவை நிறு­வ­னங்­களை மாற்­றியோர் எண்­ணிக்கை 10 கோடியை எட்­டி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2014
00:23

புது­டில்லி:கடந்த மே 29ம் தேதி நில­வரப்­படி, மொபைல் எண்ணை மாற்றாமல், வேறு நிறு­வ­னங்­களின் தொலைத்­தொ­டர்பு சேவைக்கு மாறி­யோரின் எண்­ணிக்கை, 10 கோடியை எட்­டி­யுள்­ளது.கடந்த 2011ம் ஆண்டு, ஜன­வரி 20ம் தேதி, மொபைல் எண்ணை மாற்­றாமல், வேறு நிறு­வ­னத்தின் சேவையை பெறும் திட்டம் (எம்.என்.பி.,), அறி­மு­கப்­ப­டுத்­தப் ­பட்­டது.
கட்டணம்:இதன்­படி, சந்­தா­தா­ரர்கள், 19 ரூபாய் கட்­ட­ணத்தில் ஒரு நிறு­வ­னத்தில் இருந்து வேறு நிறு­வனத்தின் மொபைல் போன் சேவைக்கு மாறலாம்.சென்ற மார்ச் 31ம் தேதி நில­வ­ரப்­படி, நாட்டின் ஒட்­டு­மொத்த மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களின் எண்­ணிக்கை, 90.45 கோடி­யாக உள்­ளது.
இதன் அடிப்­ப­டையில், சென்ற மே 29ம் தேதி நில­வ­ரப்­படி, 11 சத­வீதம் பேர், மொபைல் எண்ணை மாற்­றாமல், வேறு நிறு­வ­னத்தின் சேவையை பெற்று பய­ன­டைந்­து உள்­ளனர்.இச்­சே­வையின் துவக்­கத்தில், தள்­ளு­ப­டி­யான விண்­ணப்­பங்­களின் எண்­ணிக்கை, 40 சத­வீ­த­மாக இருந்­தது. இது, தற்­போது, 11 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
குறைபாடு:இதற்கு, தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணையம் (டிராய்), எடுத்து வரும் கடு­மை­யான நடவடிக்­கைளே காரணம்.சந்­தா­தா­ரர்­களின் விண்­ணப்­பங்­களை, கார­ண­மின்றி நிரா­க­ரித்­தது உள்­ளிட்ட பல்­வேறு சேவைக் குறை­பா­டு­க­ளுக்­காக பல நிறு­வ­னங்கள், கண்­ட­னத்­திற்கு ஆளா­கி­யுள்­ளன.
இது­போன்ற முறை­யற்ற செயல்­களுக்­காக, அந்­நி­று­வ­னங்கள், 8 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, சேவை சார்ந்த இழப்­பையும் சந்­திக்க நேர்ந்துஉள்­ளது.தற்­போது, ஒரு பிராந்­தி­யத்­திற்குள் மட்­டுமே எம்.என்.பி., வசதியை சந்­தா­தா­ரர்கள் பெற முடியும். ஒருவர் வேறு மாநி­லத்­திற்கு மாறினாலும், அதே எண்ணில், வேறு நிறு­வ­னத்தின் மொபைல் போன் சேவையை பெறும் வசதியை வழங்க வேண்டும் என, டிராய் தெரி­வித்­துள்­ளது. அந்த பரிந்­து­ரையை அமல் ­ப­டுத்­து­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் ஆரா­யப்­பட்டு வரு­தாக, தொலைத் தொடர்பு துறை தெரி­வித்­துள்­ளது.
முத­லி­டத்தில் சீனா:மொபைல்­போன பயன்­பாட்டில், சீனா முத­லி­டத்தில் உள்ளது. இந்­நாட்டில், 100க்கு 89 பேரிடம் மொபைல்போன் உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள இந்­தி­யாவில், 100க்கு 74 பேர் மொபைல்போன் வைத்­துள்­ளனர்.
மக்கள் தொகை அடிப்­ப­டை­யி­லான மொபைல்போன் பயன்­பாட்டில், அமெ­ரிக்கா, முத­லி­டத்தில் உள்ளது.நடப்­பாண்டு, ஏப்ரல் இறுதி நில­வ­ரப்­படி, அமெ­ரிக்­காவின் மக்கள் தொகை, 31.78 கோடி­யாக உள்­ளது. அதே சமயம், மொபைல்போன் சந்­தா­தாரர் எண்­ணிக்கை, மக்­கள் தொகையை விட அதி­க­மாக, 32.75 கோடி என்ற அள­விற்கு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)