பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
00:12

புதுடில்லி: பங்குச் சந்தையின் தற்போதைய எழுச்சியை சாதகமாக்கி, பல தனியார் வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை வெளியிட்டு, 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளன.
எச்.டீ.எப்.சி பேங்க், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இதற்கான அனுமதியை, உரிய துறைகளிடமிருந்து, இந்நிறுவனம் ஏற்கனவே பெற்று விட்டது.இதே போன்று, ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனமும், வெளிநாட்டு வர்த்தக கடன் அல்லது தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம், 3,000 கோடி ரூபாய் வரை திரட்ட உள்ளது.இந்த நிதியை, நடைபெற்று வரும் விரிவாக்க திட்ட செலவுகளுக்காகவும், கடன் சுமையை குறைக்கவும் பயன்படுத்தி கொள்ள, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும், கோல்கட்டாவை சேர்ந்த யுனைடெட் பேங்க், உரிமை பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.அதுமட்டுமின்றி, எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு, முன்னுரிமை அடிப்படையில் பங்கு களை ஒதுக்கீடு செய்து, கூடுதலாக, 300 கோடி ரூபாய் திரட்டவும், இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.மேற்கண்ட நிறுவனங்கள் மட்டுமின்றி, பி.எப்.யுடிலிட்டீஸ், அம்டெக் ஆட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்களும், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, நிதி திரட்டி கொள்ள ஆர்வத்துடன் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|